பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"என்ன... ?”

“கேட்டால் கோபித்துக் கொள்ள மாட்டீர்களே?”

“மாட்டேன், கேளுங்க...?”

“குதிரையின்மேல் நீங்களே ஏறி உட்கார்ந்தீர்களா ? அல்லது, அதற்குப் பக்கத்தில் ஸ்டுல், கீல் போட்டு யாராவது ஏறி, உங்களைத் தூக்கி அதன்மேல் உட்கார வைத்தார்களா?”

“நான் அந்த மாதிரி ஹீரோவுமில்லே, வில்லனுமில்லே. எதுக்கும் ‘டூப்'பைத் தேடறதும் என் வழக்கமுமில்லே. நானேதான் ஏறி உட்கார்ந்து சவாரி சேஞ்சேன். அதிலே நான் தவறிக்கிவறிக் கீழே விழுந்து, கையைக் காலை உடைச்சுக்குவேன்னு டைரக்டர் எதிர்பார்த்தாரோ என்னவோ, அப்படி ஒண்னும் நடக்கல்லே...”

“நேருக்கு நேராக எதிர்த்து நின்று தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக் கொள்ள முடியாத கோழைகள் இப்படித்தான் ஏதாவது செய்வார்கள் போல் இருக்கிறது ?”

“கோழைங்க மட்டுமில்லே, படிச்சவங்களும் அப்படித்தான் செய்யறாங்க. படிக்காதவனுக்குச் சட்டம் தெரியறதில்லே, படிச்சவனுக்குச் சட்டம் தெரியுது. அதாலே படிக்காதவன் எந்தத் தப்பைச் சேஞ்சாலும் சட்டத்துக்கு விரோதமாச் சேஞ்சிட்டு மாட்டிக்கிறான். படிச்சவன் செய்ய வேண்டிய அயோககியத்தனங்களையெல்லாம் சட்டப்படியே சேஞ்சிட்டு, எண்ணிக்கும் பெரிய மனுஷனா பெயர் எடுத்துக்கிட்டிருக்கான்!”

“இப்போதுள்ள பெரிய மனிதர்கள்தான் அப்படி இருக்கிறார்கள் என்று நான் எண்ணியிருந்தேன். அப்போதே அவர்கள் அப்படித்தான் இருந்தார்களாக்கும்?”

“அந்த அளவுக்குப் பெரிய மனுஷனுமில்லே இந்தப் பிரகாஷ்! பெரிய மனுஷன் வீட்டுப் பிள்ளை, அவ்வளவுதான் ... இந்தக் காலத்திலே ஸ்டார்ட், கட்டுன்னு ரெண்டு வார்த்தை சொல்லத் தெரிஞ்சிக்கிட்டுப்