பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சிந்தனைகள்

83


பிடிக்கிறவங்களைப் பிடிச்சா யார் வேணுமானாலும் டைரக்டராயிடலாம். அந்தக் காலத்திலே அது முடியாது. டைரக்டர்னா ‘ஸ்க்ரீன்பிளே'யிலேருந்து ‘ரீரிகார்டிங்’ வரையிலே தெரிஞ்சிருக்கணும். அதெல்லாம் பிரகாஷ-க்குக் கொஞ்சம் தெரிஞ்சிருந்தது என்னவோ உண்மைதான். ஆனா, அதை வைச்சுக்கிட்டு அவர் பண்ண அட்டகாசம்...”

“ஆமாம், அந்த நாளிலே அளவுக்கு மீறித் தண்ணி போடுபவரைத்தான் பெரிய ‘ஜீனியஸ் என்று நினைப்பார் களாமே, அது உண்மைதானா ?”

“அந்த நாளிலே மட்டுமென்ன, இந்த நாளிலுந்தான் அப்படிச் சிலர் நினைக்கிறாங்க!”

“அப்படியென்றால் ஆகஸ்ட் முப்பதாந்தேதிக்கு மேலே ஏகப்பட்ட ‘ஜீனியஸ்'கள் ரோடிலேயே நடமாட ஆரம்பித்துவிடுவார்கள்.”

“உலகம் பல விதம். சில பேர் நெற்றியிலே பட்டை அடிச்சி ஏமாத்தறான்; சில பேர் கழுத்திலே கொட்டை கட்டி ஏமாத்தறான்; சில பேர் ‘தண்ணி’ போட்டு ஏமாத்தறான். இங்கே ஏமாறவன் இருக்கிற வரையிலே ஏமாத்தறவனும் இருந்துகிட்டுத்தான் இருப்பான். அதை விடுங்க... ‘ஹார்ஸ் ரைடிங் ரிஹர்சல் நடந்து முடிஞ்சதும் ‘ஷூட்டிங்’ ஆரம்பமாச்சி...”

“அவுட்டோரா?”

“ஆமாம். அந்தக் காலத்திலே ஒரு படத்துக்கு நாலு நாள் ‘இன்டோர் ஷூட்டிங்’ நடந்தாலே அதிகம்; மற்ற ஷூட்டிங்கெல்லாம் அவுட்டோரிலேதான் நடக்கும்.”

“அப்படி நடக்கும்போது குதிரையின் மேல் உங்களை ஏற்றி, உங்களையும் குதிரையையும் லாரியில் ஏற்றி, அந்த லாரியை ஓடவிட்டு, நீங்கள் குதிரை சவாரி செய்வது போல் லாரியை மறைத்துப் படம் எடுப்பார்களா ?”

“அப்படி எடுத்தா குதிரை ஓடற சத்தமா கேட்கும்? லாரி ஓடற சத்தமில்லே கேட்கும்?"