உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறைச்சாலைச் சிந்தனைகள்

87


“ஒரு படத்துக்கு அஞ்சி லட்சம் பத்து லட்சம்னு வேண்டியிருக்கிற இந்தக் காலத்திலேயே எத்தனையோ பேரு கையிலே ஒரு பைசா இல்லாம படாதிபதியாயிடறாங்க...”

“ஐந்து லட்சம் பத்து லட்சத்தில் ஒரு படத்தையே எடுத்து முடிப்பதா? இந்தக் காலத்திலா ? அது எப்படி முடியும்? அந்தத் தொகை ஓரிரு நடிகர்களுக்குச் சம்பளமாகக் கொடுக்கவே போதாது என்கிறார்களே ?”

“அப்படித்தான் நானும் கேள்விப் படறேன். ஆனா அந்த மாதிரி நடிகருங்களை வைச்சிச் சிலபேரு பணம், போட்டும் படம் எடுக்கிறாங்க, சில பேரு பணம் போடாமலும் எடுக்கிறாங்க...”

“அது எப்படி ?”

“சிதம்பர ரகசியம் மாதிரி அது ஒரு சினிமா ரகசியம். அந்த ரகசியமெல்லாம் எனக்குத் தெரியாது; ஆனா ஒண்ணு மட்டும் தெரியும்....”

“என்ன ?”

“செட்லே சில பசங்க இருப்பானுங்க. ஷாட்டுக்கு ஷாட் லைட்-அப் பண்ணணுமில்லே, அப்போ கொஞ்ச நேரம் இடைவெளி இருக்கும். அந்த நேரத்திலே நாற்காலியைக் கொண்டு வரச் சொல்லி நான் வெளியே போட்டுக் கொஞ்சம் காற்றாட உட்காருவேன். அந்தச் சமயத்திலே, ‘சோடா வேணுமா, தண்ணி வேணுமா, காப்பி வேணுமா ?ன்னு கேட்டுக்கிட்டு அந்தப் பசங்க வருவானுங்க. ஏதாவது வேணும்னு சொன்னா கொண்டுவந்து கொடுப்பானுங்க. இப்படி ரெண்டு மூணு நாள் நடக்கும். நாலாவது நாள் அவனுங்களிலே ஒருத்தன் தலையைச் சொறிஞ்சிக்கிட்டே வந்து நிற்பான். ‘அஞ்சி, பத்துக்கு அடி போடப் போறானாக்கும்?’னு நெனைச்சி, ‘என்ன சங்கதி?'ம்பேன், அவன் அஞ்சும் கேட்கமாட்டான், பத்தும் கேட்கமாட்டான். அதுக்குப் பதிலா அஞ்சி லட்சம் பத்து லட்சம் வாங்கறதாச் சொல்லும் ஒரு பெரிய ஸ்டார் பெயரைச் சொல்லி, அவரை