பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

விந்தன்


வைச்சி நானும் ஒரு படம் எடுக்கப் போறேன். அதிலே நீங்களும் நடிக்கணும்பான்!”

“அதைக் கேட்டதும் நீங்கள் மூர்ச்சை போட்டுக் கீழே விழுந்து விடுவீர்களா?’ ‘

“இந்த அதிர்ச்சிக்கெல்லாம் கீழே விழற ஆளா நான்?... ‘படம் பூஜை போடறதோடு நிற்குமா, அதுக்கு மேலேயும் வளருமா ?'ன்னு கேட்பேன். அவன் சிரிப்பான். சிரிச்சிட்டு, ‘என்ன அண்ணே, அப்படிக் கேட்டுட்டீங்க பணத்துக்குச் சரியான ஆளைப் பிடிச்சிருக்கேன்!. அண்ணே!'ம்பான். ‘எப்படிப் பிடிச்சே ‘ம்பேன். அதெல்லாம் தொழில் ரகசியம் அண்ணே, சொன்னா உங்களுக்குப் பிடிக்காது'ம் பான். ‘அப்படியா ? அப்போ உன் படத்திலே நடிக்கவும் எனக்குப்பிடிக்காது, போடா!'ன்னு சொல்லிவிடுவேன்...”

“அந்தத் தொழில் ரகசியம் தான் ‘சினிமா ரகசியம்’ போல் இருக்கிறது:”

“என்ன ரகசியமோ, எனக்குத் தெரிஞ்சவரையிலே இப்போ சினிமா ரகசியம் ஒரு சாண் துணியிலே இருக்கு. அந்தத் துணியும் ‘சென்ஸார் போர்டு'ன்னு ஒண்ணு இருந்து தொலையுதேன்னு இருக்கு; இல்லேன்னா....”

“சினிமாக் கலையின் முன்னேற்றத்தையல்லவா அது காட்டுவதாகச் சொல்கிறார்கள் ?”

“அப்படியா ? வேறே எதையோ இல்லே அது காட்டறாப்போல இருக்கு!”

“சரி, அதை விடுங்கள்; நீங்கள் படாதிபதியான, கதையைச் சொல்லுங்கள் ?”

“படாதிபதின்னா நான் மட்டும் படாதிபதியாயிடல்லே; என்னோட பாலையா, கேசவன்நாயர், ராதாபாய், பத்மன்செல்லப்பன் எல்லாரும் இருந்தாங்க. எங்க கையிலே தொழில்தான் இருந்தது; பணம் இல்லே. அதுக்காக ரெண்டு