பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

“ஆமாம், பார்த்திருக்கிறேன்.”

“அந்த மாதிரி அப்போ என்.எஸ்.கே.யும் எப்போப் பார்த்தாலும் தான் போட்டுக்கிட்டிருக்கிற சில்க் சட்டைப் பையிலே ஒரு நூறு ரூபா நோட்டை வெளியே தெரியறாப் போல வைச்சிக்கிட்டிருப்பார். அவர் எங்களைக் கண்டதும் ‘என்ன விஷயம் ?’ ன்னு கேட்டார். பொன்னுசாமிப்பிள்ளை விஷயத்தைச் சொன்னார். ‘நாடகக் கம்பெனிக்காரன் பிழைப்பு இன்னும் அப்படித்தான் இருந்துகிட்டிருக்கா ?....ம்... இருக்கட்டும், இருக்கட்டும்’னு சட்டைப் பையிலே இருந்த நூறு ரூபா நோட்டை எடுத்து அப்படியே கொடுத்துட்டார்...”

“ஆச்சரியந்தான்!”

“இதிலே என்ன ஆச்சரியம் இருக்கு... ?” “புகழ் பெற்ற ஒரு சினிமா நடிகர் அக்கம் பக்கம் தெரியாமல் முழுசா நூறு ரூபாயை எடுத்துக் கொடுத்துவிட்டார் என்றால்... ?”

“அவர் எப்பவுமே புகழை விலை கொடுத்து வாங்கறதில்லையே, அதாலே அப்படிக் கொடுத்துவிட்டார்... அப்புறம் கேட்கணுமா?... போஸ்டர் போட்டு ஒட்டியாச்சு, நோட்டீசு அடிச்சுக் கொடுத்தாச்சு. அந்த நாடகத்திலே ஒரு ‘சவுக்கடி சீன்’ வரும். அதிலே எனக்கு நல்ல பேரு. அதாலே, ‘இழந்த காதலில் எம்.ஆர்.ராதாவின் சவுக்கடி சீனைப் பார்க்கத் தவறாதீர்கள்’னு தனி விளம்பரம் வேறே. இத்தனை அமர்க்களத்தோடே இந்த நாடகம் நடந்துகிட்டிருந்தப்போ, ஒரு நாள் சக நடிகர் ஒருவர் வந்து, ‘உங்களுக்கு அண்ணாதுரையைத் தெரியுமா ?’ ன்னு கேட்டார். ‘எந்த அண்ணாதுரையை ?'ன்னேன். ‘அதுதான், தளபதி அண்ணாதுரையை ‘ன்னார். யாருக்குத் தளபதி? ன்னேன். “சரியாப் போச்சு’, போ! திராவிடர் கழகத்துக்காகப் பெரியார் ஈ.வெ.ரா. தமிழர் படைன்னு ஒரு படையை திரட்டிக்கிட்டிருக்கலையா? அதுக்கு அவர் தளபதின்னார். ‘சரி, அதுக்கு என்ன இப்போ ?’ ன்னேன். அவர் வந்து உங்க நாடகத்தைப் பார்த்து விட்டுக் குடி அரசு பத்திரிகையிலே