பக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

96

விந்தன்


ஒகோன்னு எழுதியிருக்கார். உங்களைப் பால்முனின்னு சொல்லியிருக்காருன்னார். ‘பால்முனியா, அவன் யாரு?’ ன்னேன். ‘மேல் நாட்டிலே புகழ் பெற்ற நடிகன். அவனுக்கு நிகரா அவர் உங்களை ஒப்பிட்டு எழுதியிருக்காருன்னார். ‘நல்ல வேளை, நான் அவனைப் பார்த்துக் காப்பி அடிச்சி நடிக்கிறதா எழுதலையே?’ ன்னேன். ‘இல்லே'ன்னார். அதுக்கு மேலேதான் ‘யார் அந்த அண்ணாதுரை ?'ன்னு நான் கவனிக்க ஆரம்பிச்சேன்; விசாரிக்கவும் ஆரம்பிச்சேன். ஈரோடிலே பெரியார் நடத்தற ‘குடி அரசு’ பத்திரிகையிலே அவர் துணையாசிரியரா யிருக்காருன்னும், என் நாடகத்தால் கவரப்பட்ட அவர், ஒவ்வொரு நாள் மாலையும் ஈரோடிலிருந்து சேலத்துக்கு வந்து என் நாடகத்தைப் பார்த்துவிட்டுக் கடைசி பஸ்ஸிலே ஈரோடுக்குத் திரும்பறாருன்னும் தெரிஞ்சிக்கிட்டேன். ‘நமக்கும் இப்படி ஒரு ரசிகரா ?’ ங்கிறதைத் தவிர அப்போ நான் வேறே ஒண்ணும் நினைக்கல்லே. இது எந்த அளவுக்குப் போய் நின்னதுன்னா, அவரே ஒரு சமயம் என் நாடக மேடைக்கு வந்து, ‘அழையா வீட்டுக்கு துழையா சம்பந்தியா வந்திருக்கேன்’னு சொல்றதிலே வந்து நின்றது. அதோடு இல்லே, அதுக்கு மேலேயும் போய், ‘இந்தத் தாழ்ந்த தமிழகத்தைத் தலை தூக்கி நிறுத்த நூறு திராவிடர் கழக மாநாடுகள் நடப்பதும் ஒண்ணு, ஒரே ஒரு எம்.ஆர்.ராதா நாடகம் நடப்பதும் ஒண்ணு'ன்னு சொல்றதிலே போய் நின்றது."