உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடு ஆப்பிரிக்கா.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 ரிக்க மக்கள் ஆதரவுடன் ஜாம்பியா நாடெங்கும் பரவி யது. திரைப்பட மாளிகைகளிலும் உணவு விடுதிகளி லும் கறுப்பர் என்பதற்காக யாரையும் தடை செய்யக் கூடாதென்று சட்டம் வகுக்கப்பட்டது. இவ்வாறு சட்டம் செய்வ தற்கு வடரொடீசிய அரசுக்கு உரிமை இல்லை என்று தென் ரொடீசிய அரசு தெரிவித்தது. இந்த முடிவு வட ரொடீசியாவில் உள்ள வெள்ளை யரைத் தூண்டிவிடுவதாக இருந்தது ரொடீசியா நியாசாலந்து கூட்டாட்சியில் ஆ ப்பிரிக் கர் 95% இருந்ததை வெள்ளையர் விரும்பவில்லை. அதனால் தங்களுக்கு ஆபத்து ஏற்படுமென்று தென் ரொடீசி யாவிலுள்ள வெள்ளையர்கள் நினைத்தார்கள். தென் ரொடீசியாவைப் பிற இரு பகுதிகளிலிருந்து பிரித்து வைத்துத்தான் ஆப்பிரிக்கக் கறுப்பர் செல்வாக்கு என்ற வெள்ளத்துக்கு அணைபோட வேண்டுமென்று தென் ஆப்பிரிக்கா கருதியது. ரொடீசியா நியாசாலந்து கூட்டாட்சியில் நிற உணர்ச்சி வலுத்தது. வெள்ளையருக்கு இருந்து வந்த தனிச்சலுகைகளே கிளர்ச்சிக்கு வித்தாகஇருந்தன. 1964 ஆம் ஆண்டில் மலாவி என்ற பெயரில் நியாசாலந்தும் சில திங்கள்களுக்குப் பிறகு ஜாம்பியா என்ற பெயரில் வட ரொடீசியாவும், இந்த ஐக்கியத்தி லிருந்து பிரிந்தன. அவை சுதந்திர நாடுகளாயின. தென் ரொடீசியா தன் பெயரை ரொடீசியா என மாற்றிக்கொண்டது. இந்தியாவில் கிழக்குப் பஞ்சாப் மாநிலத்தின் பெயர் பஞ்சாப் என்று மாற்றப் பெற்றதை நினைவு கூர்ந்துகொள்ளலாம்.