உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடு ஆப்பிரிக்கா.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 ஜாம்பியா: பெயர்க் காரணம் ரொடீசியா என்பது பொதுப்பெயர். ஆப்பிரிக் காவின் தென் பகுதியில் பிரிட்டிஷ் செல்வாக்கைப் பரப்பியும் சுரங்கங்களைத் தோண்டியும் வணிக நிலையங் களை அமைத்தும் பிரிட்டிஷ் ஆட்சிக்கு 19ஆம் நூற்றாண் டில் அடித்தளம் அமைத்தவர், செசில்ரோட்ஸ் என் ற ஆங்கிலேயர் ஆவர். அவர் பெயரால் அந்தப் பகுதிகள் வழங்கலாயின. சுதந்திரம் பெற்ற ஆப்பிரிக்கர் இடையே வந்த ஆங்கிலேயரான ரோட்ஸ் பெயரை அகற்றி ஜம்பேசி என்னும் ஆற்றின் பெயரால் தங்கள் நாட்டுக்கு ஜாம்பியா என்ற பெயரை இட்டுக்கொண்டனர். ஜம்பேசி இது இந் நாட்டின் பெரிய ஆறு. இந்த ஆறு பல இடங்களில் காங்கோ நாட்டுக்கும் ஜாம்பியா நாட்டுக் கும் எல்லையாகவும் ரொடீசியாவுக்கும் ஜாம்பியாவுக் கும் எல்லையாகவும் இருக்கிறது. இந்த ஆறு பாட்ஸ் வானா, அங்கோலா, மொசோம்பிக்கே ஆகிய நாடுகளை யும் தொட்டுச் செல்கிறது. ஜம்பேசி ஆப்பிரிக்காவின் பெரிய ஆறுகளுள் ஒன்று. சிலஇடங்களில் இதன் அகலம்ஒன்றேகால் மைல். நான்கு லட்சம் சதுரமைல் பரப்பளவுக்கு இது பயன் தருகிறது. பல வகைகளில் இந்த ஆறு காவேரி ஆற்றை நினைவுபடுத்துகிறது. ஆனால் இது காவேரியைவிடப் பலமடங்கு பெரியது. காவேரியின் துணை ஆறுகளாக அமராவதி ஆறும், பவானி ஆறும் இருப்பதைப்போல கபுயே, லுவாங்வா என்ற ஆறுகள் ஜம்பேசியுடன் கலந்து அதை வளப்படுத்துகின்றன. ஜம்பேசிக்கு