உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நடு ஆப்பிரிக்கா.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 வடக்கே முப்பெரும் ஏரிகள் உள்ளன. இவற்றின் பரப்பு 4,000 சதுரமைல் (ஏறத்தாழ, தஞ்சை மாவட் டத்தின் அளவு) ஆகும். இந்த ஆற்றுக்குத் தெற்கே கரிபாவில் மிகப் பெரியதொரு ஏரியை வெட்டி அங்கு மின்சார நிலையம் நிறுவப்பெற்றிருக்கிறது. இந்த நிலையம் மேட்டூர் மின்சார நிலையத்தினும் பெரியது. ஜம்பேசி ஆற்று நீரைப் பயன்படுத்த மற்றும் ஒரு மின்சார நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த இரண்டு நிலையங்களும் கட்டுவதற்கு உலக வங்கி உதவி யுள்ளது. கரிபா ஏரியில் நீச்சடிக்கவும், படகோட்டவும், வேனிற்காலத்தில் பொழுதுபோக்கவும் வசதி உண்டு. கப்பல் ஏறி, இவ்வேரிகள் வழியாகத் தங்கனிகா, டான் ஜேனியா நாடுகளுக்கும் செல்லலாம். அருவிகள் ஜாம்பியா-ரொடீசியா எல்லையில் இந்த ஆற்று நீர் 350 அடி உயரத்திலிருந்து விழுகிறது. விக்டோ ரியா அருவி என்பது இதன் பெயர். அருவி நீர் விழுந்து பயன்படும் பரப்பில் விக்டோரியா ஏரிதான் உலகிலேயே பெரியது என்று சொல்லுகிறார்கள். விக்டோரியா அருவி என்பது ஆங்கிலேயர் வைத்த பெயர் ஆகும். ஆப்பிரிக்கர் இதை முசிஉவாடுன்யா என்று குறிப்பிடுகின்றனர். இடிமுழக்கத் துடன் கூடிய தண்ணீர் என்பது இச்சொற்றொடரின் பொருள். இதைவிட உயரமான ஏரிகளும் ஜாம்பியாவில் உள்ளன. கலம்போ அருவியின் உயரம் 726 அடி. மைசூர் மாநிலத்திலுள்ள மகாத்மா காந்தி அருவியின் உயரம் 800 அடி. 55.-2