பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106

ஊருக்கு முன்னால்

ஊருக்கு முன்னால் வி.எ. (adv.) தேவை யில்லாமல் மற்ற அனைவரையும் முந்திக்கொண்டு; (as through

something is) the very first thing to be done (implying unseemly hurry). ஊருக்கு முன்னால் மண்டபத்துக்கு போய் என்ன செய்யப்போகிறாய்?' ஊருணி பெ.(n.) பெரும்பாலும் சிற்றூர்ப் புறத்திலுள்ள குடிநீருக்கான குளம்; tank; pond (in a village maintained as a source of drinking water). ஊரைக் கூட்டுதல் வி. (v.) கூச்சல் போட்டு, பெருங்கூட்டம் கூடுமாறு செய்தல்; collect an unwanted crowd. இப்போது என்ன நடந்துவிட்டது என்று ஊரைக் கூட்டுகிறாய்?. ஊரைவிற்றுவிடுதல் வி. (v.) பார்ப்பதற்கு ஏதுமறியாத பேதைபோல் தோன்றி னாலும் தகுந்த சமயத்தில், பிறர் வியக்கும் வகையில் தனக்குத் தேவை யான ஒன்றைச் செய்து கொள்ளுதல்; be far too clever (to be taken for an innocent person or to be trusted). ஆளைப் பார்த்து எடை போடாதே; அவன் ஊரை விற்றுவிடுவான்'. ஊழ்வினை பெ. (n.) இப்பிறவியில் துய்க்கும் நன்மை, தீமைக்குக் காரணம் என்று தம்பப்படும், முற் பிறவியில் செய்த செயல்; முன் வினை; deeds committed in one's

previous birth (believed to be responsible for one's lot in this birth). ஊழல் பெ. (n.) முறைகேடு, நேர்மை யின்மை; comuption, corrupt practice. ஊழலற்ற ஆட்சியையே மக்கள் விரும்புவார்கள்.

ஊழி

பெ. (n.) I. நீண்ட காலம் நிலைக்கும் ஒரு கால அளவு; acon. ஊழி முடிவே வந்துவிட்டது போல் இருந்தது.2.ஊழி (யுகம்) முடிவு;

apocalypse. தாண்டவம்'.

சிவனின்

ஊழித்

ஊழியம் பெ. (n.) 1. கடவுள், அரசன் முதலியோர்க்குச் செய்யப்படும் தொண்டு அல்லது சேவை; service (to God, king). கோயிலுக்கு ஊழியம் செய்தால் புண்ணியம்'. 2. கிறித்தவ மதத்தைப் பரப்பும் தொண்டு; work of an evangelist. 'நான் தேவனுக்கு ஊழியம் செய்கிறேன். 3. அரசுத்துறை முதலியவற்றின் பணி, வேலை; service in a department of government or in an organized agency. 'அரசுத் துறையில் ஊழியம் செய்வோர்சங்கம்'.

ஊழியர் பெ.(n.) I. பணியாளர்; employee in an office, bank, etc.,). 'அரசு ஊழியர் சங்கம்'. 2. தொண்டர்; worker (in an organization). கட்சியின் உண்மை ஊழியர். 3. தொண்டு (சேவை) செய்வோர்; servant (of god or king). கோயில் ஊழியர்.

ஊளை பெ. (n.) 1.தரி, ஓதாய் போன்றவை எழுப்பும் ஒலி; தாயின் அழுகை ஓலம்; (of fox, jackal, dog, etc.,) howl. ஊளையிட்டது. 2. புளித்த நாற்றம்; stink (of sour milk). ஊளைமோர் எனக்கு வேண்டாம்'. 3. தாற்ற மடிக்கும் சீழ் அல்லது சளி; putrid smell (of pus or mucus). 'ஊளைக் காது'. ஊளைச் சதை பெ. (n.) உடம்பில் அளவுக்கு அதிகமாகத் தொங்கும் சதை; flab

ஊற்று பெ.(n.) I. நிலத்திலிருந்து வரும் நீர், எண்ணெய் போன்றவற்றின் சுரப்பு; spring (of a well, pond, etc.,). ஊற்று தோண்டி நீர் குடித்தோம்'. 2. மேல் நோக்கிய பீச்சும் நீர்; fountain. ஊற்றுக்கண் பெ. (n.) 1. நீர் சுரந்து வரும் வழி; orifice of a spring. 'ஊற்றுக்கண் திறந்துவிட்டது'. 2. ஒன்று உருவா வதற்கு அல்லது தோன்றுவதற்கு அடிப்படையாக அமைவது; source;