பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படும் பறவை அல்லது விலங்கு; bird or animal used as a mount by gods or celestial beings. 'மயில் முருகனின் ஊர்தி.

ஊர்ப்பஞ்சாயத்து பெ. (n.) ஊருக்குப் பொதுவான செய்திகளைப் பற்றி பேசி முடிவெடுக்கவும், தனியார் கொண்டு வரும் சிக்கல்களுக்குத் தீர்வு காணவும் ஊர்ப் பெரியவர் களை வைத்து நடத்தும் கூட்டம்; non official assembly of villagers to discuss common issues and also to decide on private disputes.

ஊரார்

105

ஊர்வன பெ. (n.) செதில்கள் போன்ற வற்றால் மூடப்பட்ட தோலைக் கொண்ட, கால்களால் அல்லது உடலால் ஊர்ந்து செல்கிற, முட்டை யிட்டுக் குஞ்சு பொரிக்கும் முது கெலும்புள்ள உயிரினம்; class of reptiles.

ஊர்வாய் பெ. (n.) பிறரின் குற்றம் குறை காணும் ஊராரின் பேச்சு; gassip; scandal; accusation. 'உலைவாயை மூடலாம் ஊர்வாயை மூட முடியுமா. ஊர்விலக்கம் பெ. (n.) தண்டனையாக ஊரிலிருந்து ஒருவரை விலக்கி வைத்தல் ; social b oycott. ஊரக பெ.எ.(adj.) சிற்றூர்ப்புற; rural. 'ஊரக வளர்ச்சி'.

ஊர்ப்பட்ட பெ.எ. (adj.) அளவுக்கு அதிகமான; ஏகப்பட்ட; more than usual; more than manageable. 'ஊர்ப் பட்ட வேலை இருக்கிறது'. ஊர்ப்புறம் பெ. (n.) சிற்றூர்ப்புறம் (கிராமப்புறம்); rural area; country side. ஊர்ப்புறங்களில் தைப்பொங்கல் ஊரடங்கு உத்தரவு பெ. (n.) சட்டம்,

விழா சிறப்பாகக் கொண்டாடப் படும்.

ஊர்மேய்தல் வி. (v.) 1.கட்டுப்பாடு இல்லாமல் ஊர் சுற்றுதல்; gad about. எங்கே ஊர்மேய்ந்துவிட்டு இந்த நேரத்துக்கு வீட்டுக்கு வருகிறாய்?'. 2.பலரிடம் தவறான உறவு கொள் ளுதல்; have sex with many. ஊர்வம்பு பெ. (n.) ஒருவருக்குத் தொடர் பில்லாத அல்லது தேவையில்லாத சிக்கல் (பிரச்சினை); வீண்வம்பு; affairs not one's own; gossip. ஊர்வலம் பெ. (n.) 1. குறிப்பிட்ட நோக்கத்துக்காகத் தெருவில் அணி அணியாகச் செல்லுதல்; procession; rally. 'விலைவாசி உயர்வைக் கண் டித்துப் பொதுமக்கள் ஊர்வலம் நடத்தினர்.2.விழாவில் அல்லது கொண்டாட்டத்தில் வீதிவலம் வருதல்; procession in festivals or celebrations.குதிரையில் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார்.

ஒழுங்கு குலையக்கூடிய நிலை மைகள் காரணமாக, தேவை யில்லாமல் மக்கள் பொது இடங்களில் நடமாடக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையர் போன்றோர் பிறப்பிக்கும் ஆணை; curfew.

ஊரல் பெ. (n.) அரிப்பு; உடலில் சொறியத் தூண்டும் உணர்வு; itching sensation. வண்டு கடித்த இடத்தில் ஊரல் எடுக்கிறது'.

ஊராட்சி பெ. (n.) சிற்றூர்க்கான உள்ளாட்சி அமைப்பு;

machinery for local self-government at the village level; (in India) village panchayat.

ஊரார் பெ. (n.) 1.ஊரில் வாழும் மக்கள்; inhabitants of a village. 2. ஒரு செயலில் நேரடியாகத் தொடர்பில்லாதவர்கள்; persons who are not directly connected with something. 'ஊரார் பேச்சைக் கேட்டு ஆடாதே'.