பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 அண்டுதல் அண்டுதல் வி. (v.) ஒருவரை அணுகுதல், நெருங்குதல், வந்து சேர்தல்; (of illness, ham, etc.,) come near, get at. 'தீமை'. அண்ணி பெ.(n.) அண்ணனுடைய மனைவி; wife of one's elder brother. அணுகுமுறை பெ. (n.) ஒன்றைச் செய்ய அல்லது ஒரு சிக்கலைத் தீர்ப்பதற்கு மேற்கொள்ளும் வழிமுறை; approach. அத்தனை பெ. (n.) குறிப்பிட்ட அளவு; that much; all that. அத்துப்படி பெ. (n.) குறிப்பிட்ட செய்தியைப் பற்றி எல்லாம் அறிந்த நிலை; being thoroughly informed about something. அதட்டல் பெ. (n.) குரலில் வெளிப் படுத்தும் கண்டிப்பு; something said in a sharp tone. 'ஒரு அதட்டல் போட் டால்தான்பையன் அடங்குவான். அதிகப்படி பெ.(n.) அளவுக்கு அதிக மாகுதல், கூடுதல்; surplus, more than required, too much, too long. 'அதிகப் படியான நெல்லை விற்று விடலாம். அதிகப்படுத்தல் வி. (v.) ஒன்றின் அளவைக் கூட்டுதல்; increase, raise. *மகிழுந்து(கார்)வின் விரைவை அதிகப்படுத்தினால் மட்டுமே நாம் விரைவாய் ஊர் போய்ச் சேர முடியும். அதிகப்படுதல் வி. (v.) குறிப்பிட்ட அளவை விட மிகுதல்; மேற்படுதல்; (usually in the negative) be more than (the limit specified). வீட்டுச் செலவு பத்தாயிரம் ரூபாய்க்கு அதிகப்படாமல் பார்த்துக் கொள். அதிகபட்சம் பெ. (n.) உயர்ந்த அளவு; maximum, upper limit of something. அதிகம் பெ. (n.) கூடுதல், மிகுதி; that which is more. அதிர்ச்சி பெ. (n.) எதிர்பாராத நிகழ்ச்சி யால் மனத்தில் ஏற்படும் மனக் கலக்கம்; (Phychological) shock. சாவுச் செய்தி கேட்டதும் அதிர்ச்சியில் உறைந்து நின்றான். அப்பட்டமாக வி.அ. (adv.) ஒளிவு மறைவில்லாமல், வெளிப்படை யாக; unreservedly, blatantly, downright. அப்படி வி.அ. (adv.) I.ஏற்கனவே குறிப்பிட்ட வகையில் அல்லது முறையில்; அவ்வாறு, in the way or manner stated like that. 2. அந்தப் பக்கம், அங்கு; (of direction) there. அப்படிப்போய் உட்கார்ந்து பேசலாம். அப்படிஇப்படி வி.அ. (adv.) I. திட்ட வட்டமாகக் கூற முடியாதபடி; uncertain, vague. 2. எல்லா வகையிலும் சரியாக இருக்கும் என்று சொல்ல இயலாத நிலை; in a way that is not uniformly good. 'குடும்பம் என்றால் அப்படி இப்படி என்று இருக்கத்தான் செய்யும்'. அப்பப்பா இ.சொ. (int.) ஒன்றின் மிகுதியை உணர்ச்சியுடன் வெளிப்படுத்தப் பயன்படும் இடைச்சொல்; particle used when something. அப்பாடா பெ. (n.) மன அமைதியை உணர்த்தும் சொல்; expression of mental peace and relaxation. அப்பாடி இ.சொ. (int.) அப்பாடா பார்க்க. அப்பாவி பெ. (n.) 1. கள்ளங்கவடு மில்லாத, தற்காத்துக் கொள்ளவும், சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளவும், தெரியாத தன்மை; native person; resourceless person. 2. குற்றம் செய்யாமலே குற்றத்துடன் தொடர்பு படுத்தப்படும் ஆள்; innocent. அப்பாபிள்ளை பெ. (n.) அப்பாவின் (செல்லத்துக்குரிய) அன்புக்குரிய பிள்ளை; daddy's pet.