பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செஞ்சோற்றுக்கடன் பெ. (n.) அரசனிடம் பெற்றுண்ட உணவுக்காக அவன் பொருட்டு வீரன் தன் உயிரைப் போரிடைக் கொடுத்தலாகிய கடமை; duty or obligation of a soldier to lay down his life in the cause of the kind who fed him.

செண்டு பெ. (n.) கட்டப்பட்ட மலர்த் தொகுப்பு பூக்கற்றை; a kind of bouquet.

செத்தை பெ.(n.) எரிப்பதற்கானகாய்ந்த புல், சருகு முதலியன; dry waste materials like leaves, straw, etc., செதில் பெ. (n.) செதில் பார்க்க. செதிள் பெ. (n.) மீன், ஓணான் போன்ற வற்றின் உடல் மேல் செறிவாக மூடியிருக்கும் விறைப்பான தோல் அடுக்கு; scale of garden lizard, of fish,

etc.,

செதுக்குதல் வி. (v.) I. புல் முதலியன செதுக்குதல்; to cut off a surface as in cutting grass; to pare, shave off. 2. மரம் முதலியன செதுக்குதல்; to plane, how with an adze, chisel. கட்டையைச்

செதுக்கிக்கத்திக்குப் பிடி போட்டான். செதுக்குளி பெ. (n.) 1. கட்டையைச் செதுக்கப் பயன்படும் உளி; carpenter's chisel. 2. மணி பதித்தற்குரிய தட்டான் கருவி;

gold-smith's chisel, used in encasing.

செப்பஞ்செய்தல் வி. (v.) 1. கட்டடங் களைப் பழுது பார்த்தல்; to repair buildings, maintenance of buildings. 2. பழுது, குறைபாடு, பிழை முதலிய வற்றை நீக்கிச் சரிசெய்தல்; புதுப் பித்தல்; restore; renovate; set right. செப்பனிடுதல் வி. (v.) I. பழுதுபார்த்தல், சீர்திருத்துதல்; to repair, correct. 'சாலை களைச் செப்பனிடக் கேட் டுள்ளோம். 2. சமப்படுத்துதல்; to level, make even. 3. மெருகிடுதல்; to polish.

செம்மறி ஆடு

247

செப்புக்குடம் பெ. (n.) I. கோயில் கோபுரத்தின் மீது பொருத்தப்படும் செம்பாலான குடம்; omamental copper kudam placed at the top of vimanam and gopuram. 2. கோயில் பூசைக்கு நீர் எடுத்து வரும் செம்பாலான குடம்; copper vessel used to bring water to temple rituals.

செப்பேடு பெ.(n.) பழங்கால அரசர்களின் ஆணைகள், அவர்கள் வழங்கிய கொடை பற்றிய செய்திகள் முதலா னவை பொறிக்கப்பட்ட செப்புத் தகடு;

copper - plate grant. 'சோழர் காலச் செப்பேடுகள் அந்தக் கால நிர்வாக முறையை அறிய உதவு கின்றன.

செம்பு பெ. (n.) 1. வெப்பம், மின்சாரம் ஆகியவற்றை எளிதில் கடத்தக் கூடியதும் கடினத்தன்மை குறைந்தது மான வெளிர்ச் சிவப்பு நிற மாழை, Gio; copper cuprum, as reddish copper, a light and light red metal earily conducting heat and current. 2.பொன்;gold. 3. நீர், பால் முதலிய வற்றை எடுத்துச்செல்ல ஏத்தாகக் குறுகிய கழுத்தும் உருண்டை வடிவக் கீழ்ப்பகுதியும் உடைய ஓர் மாழை ஏனம் ; a small metal vessel with a narow neck for carrying water, milk, etc., செம்பொன் பெ. (n.) சிறந்த பொன்; superior gold.

செம்மண் பெ. (n.) மட்பாண்டங்கள் மீது பூசவும்,சாலைகள் அமைக்கவும் பயன்படும் ஒருவகைச் சிவப்பு நிற LOT; a kind of red earth, red soil.

செம்மறி ஆடு பெ. (n.) கம்பளிப் போர் வைக்குத் தேவையான முடியைப் பெறுவதற்காகவும், இறைச்சிக் காகவும் வளர்க்கப்படும் ஒருவகைப் பழுப்பு நிற ஆடு; common brown sheep.