பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248

செம்மைப்படுத்துதல்

செம்மைப்படுத்துதல் பெ. (n.) 1. ஒழுங்கு படுத்துகை; to put in order, adjust, arrange, make ready, rectify. 2. தூய்மை யாக்குகை; to cleanse. 3. அழகு படுத்துகை; to dress, decorate. செய்தி பெ. (n.) I. குறிப்பிட்டுச் சொல்லும் படியான நிகழ்ச்சி பற்றிய விளக்கம்; a detail news about a particular programme. 2. தெரிவிக்கப் படத் தகுதியுள்ள விளக்கம் (செய்தி); news, message, information. அவனுக்குப் பணம் கிடைத்த செய்தி எனக்குத் தெரியாது'.

செய்தித்தாள் பெ. (n.) நாள்தோறும் செய்திகள் அச்சடிக்கப்பட்டு, விற்ப னைக்கு வரும், நாட்டு நடப்பைக் காட்டும் நாளிதழ்கள் (பத்திரிக்கை);

சிறு

news paper. செய்தித்துணுக்கு பெ. (n.) கவனத்தை ஈர்க்கும் வகையில் செய்தியிதழ்களில் வெளியாகும் சுவையான செய்திகள்; titbits in periodicals. 'அந்தச் செய்தியிதழில் செய்தித்துணுக்குகள் அதிகம் வெளிவருகின்றன. செயல்திட்டம் பெ. (n.) ஒரு குறிப்பிட்ட கால எல்லைக்குள் செய்து முடிக்க வேண்டிய பெரிய திட்டத்தின் நடைமுறைச் செயற்பாடு; action programme. 'இரண்டாயிரம் வீடுகள் கட்டித் தருவதாக அரசு செயல் திட்டம் வகுத்துள்ளது’. செயலிழத்தல் வி. (v.) செயற்படும் திறனை இழத்தல்; become impaired. பக்கவூதையால் ஒருகையும் காலும் செயலிழந்துவிட்டது'.

செயற்குழு பெ. (n.) நிருவாகத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் குழு; executive committee. 'பொதுக் குழுவின் செயற்பாடுகளைச் செயற் குழு நடைமுறைப்படுத்தும்'.

செரித்தல் வி. (v.) குடலினால் உறிஞ்சப் படுவதற்கு ஏந்தாக உணவில் உள்ள சத்துகள் வயிற்றுத் தசைகளினால் அரைக்கப்பட்டுக் கூழாதல் (சீரண மாதல்); to be digested. 'தின்ற சோறு செரிக்கவாவது வேலை செய்ய வேண்டும்.

செருக்கு பெ. (n.) பிறரை மதிக்காத போக்கு, இறுமாப்பு (அகந்தை);

haughtiness, pride, arrogance, self-conceit. செருக்குதல் வி. (v.) பாக்கு முதலியன தொண்டையில் அடைத்துக் கொள் ளுதல்;

to be choked, as by a bone or a piece of areca-nut.

செருகுதல் வி. (v.) ஒரு பிடிப்பில் நிற்கும்படி ஒன்றை நுழைத்தல் அல்லது திணித்தல்; to insert, to slide

into.

செல்லங்கொடுத்தல் வி. (v.) அன்பு மேலீட்டால் குழந்தைகட்கு அதிக இடங்கொடுத்தல்; to be indulgent, as to a child.

செல்லப்பிள்ளை

பெ. (n.) செல்லம் கொடுத்து வளர்க்கப்பட்ட அருமைக் குழந்தை; child brought up delicately, petted child.

செல்லரித்தல் வி. (v.) கறையானால் தின்னப்படுதல்; to be eaten by white

ants.

செல்லவைத்தல் வி. (v.) செல்லாத காசைச் (நாணயத்தை) செலாவணி யாக்குதல்; to pass, as a base coin.

செல்லாக்காசு பெ. (n.) I. செலா வணியாகாத பணம்; coin that will not pass, base coin. 2. செல்வாக்கும் மதிப்பும் இழந்தவன் (வின்); one who has lost credit or influences. அவன் அரசியலில் செல்லாக்காசு ஆகிப் போனான்.

செல்லாக்காசோலை பெ. (n.) பணம் மறுக்கப்பட்ட காசோலை;

dis- honoured cheque.