பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செல்லாக்காலம் பெ. (n.) I. செல்வாக்கு நீங்கின காலம்; time when one's influence is gone, as by loss of office, reputation, etc., அந்தக் கட்சிக்கு இப்போது

செல்லாக்காலம்'.

2. தள்ளாத கிழப்பருவம்; decrepit, old

age.

செல்லுபடியாகுதல் வி. (v.) உரிய மதிப்பையும் பயனையும் பெற்று நடைமுறையில் ஏற்கப்படுதல்; be valid; be in force. 'உன் அதிகார மெல்லாம் இனி செல்லுபடி யாகாது.

செல்வச்செருக்கு பெ. (n.) செல்வ மிகுதியால் உண்டாகும் இறுமாப்பு; haughtiness due to wealth. 'செல்வச் செருக்கால் அழிந்தோர் பலர். செல்வந்தன் பெ. (n.) மிகுந்த செல்வம் படைத்தவன்; rich person, plutocrat. செல்வம் பெ. (n.) I. மதிப்புள்ள உடைமைகளின் தொகுப்பு; சொத்து; பொருள்வளம்; wealth, riches. எவ்வளவு செல்வம் இருந்தும் என்ன பயன்'. 2. கல்வி; leaming. 3. குழந்தை;

child.

செல்வாக்கு பெ. (n.) பணம், மதிப்பு, பதவி முதலியவற்றால் பிறரைத் தன் விருப்பத்திற்கு ஏற்ப நடக்கச் செய்ய அல்லது வழிநடத்த இருக்கும் திறன், நாடெங்கும் கிடைக்கும் பெரு மதிப்பு; influence.

செலவழிதல் வி. (v.) பணம்,பொருள், நேரம் முதலியன செலவாய்ப் போதல்; to be spent, used up, consumed.

செலவிடுதல் வி. (v.) 1. கூலி கொடுத்தல், பொருள் வாங்குதல் போன்றவற் றிற்காகப் பணத்தை வழங்குதல்; to spend. 2. பணம் போன்றே நேரம் முதலியவற்றையும் செலவிடுதல்; to spend time like money, etc.,

சேமிப்பு

249

செலவுசெய்தல் வி. (v.) பணம், பொருள், நேரம் போன்றவற்றைத் தீர்த்தல்; to spend, consume, use up.

செவிசாய்த்தல் வி. (v.) 1. சொல்வதைக் கேட்கச் செவி தாழ்த்தல்; to incline one's ear. 2. விருப்பமுடன் கேட்டல்; hearing with interest.

செவிடு பெ. (n.) கேட்கும்திறன் இல்லாமை, காது கேளாமை; deafness. நேர்ச்சியி(விபத்தி)ல் அவனுக்குக் காது செவிடாகி விட்டது.

செவிப்பறை பெ. (n.) செவியின் உட்பகுதியில் ஒலியை உணர் வதற்காக இருக்கும் மெல்லிய தோலாலான உறுப்பு;eardrum. செழித்தல் வி. (v.) தழைத்தல்; to thrive, flourish, grow well, as vegetation. செறுமுதல் வி. (v.) கனைத்தல், உறுமுதல்; to hem, grunt.

சே

சேடைபாய்ச்சுதல் வி. (v.) வயலில் நீர் நிறைத்தல்; to fill fields with water. சேந்துகிணறு பெ. (n.) இறைக்கும் கிணறு; draw well.

சேந்துதல் வி. (v.) I. கயிறு முதலிய வற்றை இழுத்தல்; to draw, as a rope running over a pulley. 2. கிணற்றி லிருந்து தண்ணீர் இறைத்தல்; draw water from a well. அவள் கிணற்றி லிருந்து தண்ணீரைச் சேந்தினாள்'. சேமிப்பு பெ. (n.) 1. எதிர்காலத் தேவை கருதி வைப்பகம் முதலியவற்றில் சிறிது சிறிதாகச் சேர்த்து வைத் திருக்கும் பணம்; savings in a bank, etc., 2. எதிர்காலத் தேவை கருதி உணவுப் பொருள், குருதி முதலியவற்றைப் பாதுகாப்பாக உரிய இடத்தில்