பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250

சேர்க்கை

சேர்த்தல்; store of paddy, blood, etc.; stock. சேர்க்கை' பெ. (n.) 1. தட்பு, தொடர்பு; friendship, intimacy. 2. சீட்டு விளையாட்டு போன்றவற்றில் ஒத்த சீட்டுகளைச் சேர்த்தல்; collecting the equivalents, as in the playing card game. சேர்க்கை’ பெ. (n.) 1. ஒன்றோடொன்று சேர்ந்திருக்கும் நிலை, கூடுகை; combining, mixing. 'சுண்ணாம்பின் சேர்க்கையால் மஞ்சள் செத்திற மடையும். 2. கலப்புப்பொருள்; compound, mixture. 3. பள்ளி முதலிய வற்றில் மாணவர்கள் சேருவதற்கான பதிவு; admission to a school, etc., entrolment.

சேரிமடை பெ. (n.) மதகின் மேலாக வழிந்தோடும் மிகுதி நீர் வாய்க்கால்; sluice carrying surplus water. சேவற்சண்டை பெ. (n.) சேவல்களின் காலில் கத்தியைக்கட்டி மோத விடும் ஒருவகை சண்டை; cock'

s-fight. சேவு பெ. (n.) கடலை மாவைப் பிசைந்து அச்சில் தேய்த்து எண்ணெயில் இட்டுச் செய்யப்படும்காரஅல்லது இளிப்புச் சுவையுடைய திண் பண்டம்;

a savoury or sweet in the shape of start stick-

strips made of chick - pea past fried in oil. சேவைநாழி பெ. (n.) சேவை பிழிவதற் கான அடித்துனைகளும் கைப்பிடி களும் கொண்டு, ஒன்றுக்குள் ஒன்று செல்லுமாறு அமைந்த உழக்குப் போன்ற கருவி:

a kind of colander-like vessel used in preparing sevai. சேற்றுக்கால் பெ. (n.) I. வயலில் தொளியடித்து நாற்று நடவு செய்ய அணியாகும் நிலம்;

wet - ploughing system of cultivation. 2. தொனியடித்து விதைக்கும் வயல்; land (trampled, ploughed and puddled for sowing paddy).

சேற்றுப்பலகை பெ. (n.) சேறடித்த வயலைச் சமன்செய்யப் பயன்படும் பலகை; பரம்புப்பலகை; wooden plank to flatten the slushed wet land. சேற்றுப்புண் பெ. (n.) வேளாண் பணி செய்பவர்களுக்குக்கால் விரலிடையில் உண்டாகும் அரிபுண்; itching sore between to toes, due to frequent walking. in the mud.

சேறாடுதல் வி. (v.) வயலில் விதைத் தற்குத் தொளி கலக்குதல்; to make a field slushy for sowing paddy.

சேறு பெ (n.) 1. நீருடன் கலந்து குழைத்த மண், சகதி; mud, mire, slush, loam. 2. பனம் பழம், தேங்காய் முதலிய வற்றின் செறிந்த உள்ளீடு; kemal, as of

a coconut.

சேனைக்கால் பெ. (n.) கோயிலில் குடவடிவ விளக்கை வைக்கும் கம்பம்:

stant of a pot-shaped lamp used in temples.

சேனைப்பால் பெ. (n.) குழந்தை பிறந்ததும் புகட்டும் இனிப்புக் கலந்த நீருளவு: sweetened liquid, used for feeding an infant as soon as it is born.

சை

சைகை பெ. (n.) செய்தி தெரிவிக்கும் முறையில் கை, கண் முதலிய வற்றால் காட்டும் குறிப்பு; signal gesture, hint, as winking at the eyes, hand,

சொ

சொக்கட்டான் பெ. (n.) உருட்டிப்போடும் கட்டைகளின் எண்ணிக்கைக்குத் தகுந்தபடி விளையாடும் தாய விளையாட்டு வகை; agame similar to backgammon.

சொக்கட்டான்காய் பெ. (n) சொக் கட்டான் ஆட்டத்தில் பயன்படுத்தும் காய்; pieces used in the game of sokkattan.