பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சொக்கிடுதல் வி. (v.) மயக்கப்பொடி தூவுதல்; to sprinkle magic powder for inducing stupor.

சொக்குதல் வி. (v.) 1. அழகு, திறமை முதலியவற்றால் தன்வயம் இழத் தல்;மயங்குதல்; to become languid, sleepy; to be stupefied. 2. தூக்கத்தால் கண்கள் செருகுதல்; to be heavy with sleep. சொக்குப்பொடி பெ. (n.) பிறரை மயக்கித் தன்வயப்படுத்துவதற்குப் பயன்படும் மாயப்பொடி; amagic powder causing stupor love powder.

சொட்டுநீர்ப்பாசனம் பெ. (n.) குழாய்களின் வழியே நீரைச் செலுத்தி, மரம், செடி, கொடிகளின் வேர்ப்பகுதியில் நீர் கொட்டும் வகையில் அமைந்த பாசனமுறை; drip irrigation.

சொட்டுமருந்து பெ. (n.) I. இளம் பிள்ளை இசிவு நோய் தாக்காமல் இருப்பதற் காக, குழந்தை பிறந்த மூன்றாவது மாதத்திற்குப் பின் 6 திங்களுக்கொரு நாள் மேனி ஐந்து ஆண்டுகள் குழந்தையின் வாயில் சொட்டு சொட்டாக ஊற்றப்படும் மருந்து; polio drops. 2. கண், காது, மூக்கு,வாய் ஆகியவற்றில் சொட்டுச் சொட்டாக விடப்படும் மருந்து; medicinal drops. சொட்டை விழுதல் வி. (v.) தலையில் வழுக்கை உண்டாதல்; to become bald, as the head.

சொடக்கு பெ. (n.) கட்டை விரலையும் நடுவிரலையும் சேர்த்துச் சுண்டி யெழுப்பும் ஒலி; கை நொடித்தல் பொழுது; time taken to snap one's fingers, moment.

சொண்டுமிளகாய் பெ. (n.) விதை யில்லாத சொத்தை மிளகாய்த் தோல்; blignted pod of chilly.

சொத்து பெ. (n.) அசையும் பொருள் அசையாப்பொருள் என்ற இருவகை உடைமைகள்; property, possessions,

சோத்துவெள்ளி

251

being of two kinds viz., tavaram and sangamam. 'சொத்தை விற்றுக்கடனை அடைத்தார்.

சொத்தை பெ. (n.) புழு, வண்டு முதலியன அரித்த காய்கறி பழம் முதலியவை;

that which is decayed, wom - eaten, injured by insects.

சொருகு பெ. (n.) செருகுதல் பார்க்க. சொல்லடைவு பெ. (n.) ஒரு நூலில் வழங்கும் சொற்களை அகரவரிசைப் படுத்தி நூலுடன் இணைக்கும் பட்டியல்; word index (for texts, ext., literary works).

சொல்லாடுதல் வி. (v.) பேசுதல்; to speak,

talk.

சொறிசிரங்கு பெ. (n.) தோலில் சொர சொரப்பானதடித்த சுற்றுப் பகுதியை உடைய புண்களை உண்டாக்கி அரிப்பை ஏற்படுத்தும் ஒருநோய்; a kind of itch that causes much annoyance, herpes, scab.

சோ

சோகை பெ. (n.) குருதிக் குறைவால் முகம் வெளுத்து ஊதுமாறு செய்யும் நோய்வகை; anaemia, a disease characterised by pale and bloated face. சோணைக்காது பெ. (n.) அடிபெருத்த காது ; large lobed ear. சோத்துப்பெட்டி பெ. (n.) மீனவர் கட்டுச் சோறு எடுத்துச் செல்லப் பயன் படுத்தும் கோரையினால் ஆன பெட்டி ; small box made of sedge to convey packed meals.

சோத்துவெள்ளி பெ. (n.) மீனவர் இரவில் உணவு உண்ணுவதற்கான நேரம் கணிக்கப் பயன்படும் வெள்ளி (உறுமீன்); the silver star, which is seen to determine the time for night meals by fishermen in sea.