பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252

சோப்பளாங்கி

சோப்பளாங்கி பெ. (n.) 1. பயனற்றவன்; lazy, worthless fellow. 2. வலு வற்றவன்; weak person.

சோம்பல்முறித்தல் வி. (v.) சோம்பற் குறியாக உடம்பை சொடக்கு வாங்குதல்; to stretch or twist oneself due to excessive idleness. சோம்பியிருத்தல் வி. (v.) வேலைக்கு வாராது நின்றுவிடுதல்; உடல் தளர்வாதல்; வாடியிருத்தல்; to stay away from work.

சோம்பேறி பெ. (n.) சோம்பலுள்ளவன்; sluggard, idler.

சோமாறி பெ. (n.) 1. சோம்பேறி; idle fellow, sluggard. 2. Qorong; person who frequently changes his words. சோர்தல் வி. (v.) 1. உடல் அல்லது மனம் மேற்கொண்டு செயல்பட ஆற்றலற்று தளர்தல்; to languish, droop, to he prostrate or relaxed, as the limbs in sleep, to be weary, exhausted.

சோர்வாதம் பெ. (n.) கை, கால்களில் அயர்ச்சியுண்டுபண்ணும் முடக்கு நோய்வகை; a disease causing loss of power in the limbs. சோரப்பெய்தல் வி. (v.) மழை மிகுதி யாகப் பொழிதல்; to rain profusely, சோலை பெ (n.) மரங்கள் செறிந்து நிழல் தரும் இடம்; flower garden, grove. சோழி பெ. (n.) மாலையாகக் கோக் கவோ, விளையாடவோ பயன்படும் கடல்வாழ் சிறு உயிரிகளின் வெள்ளை அல்லது பழுப்பு நிற ஓடு,

பலகறை; cowry.

சோழிக்கூடு பெ. (n.) நடுவில் துளை யிடப்பட்டு, நான்கு மூலைகளிலும் கயிறுகளால் கட்டப்பெற்ற பலகை; & plank with a hole in the middle, tied at

all four comers.

சோளக்கூழ் பெ. (n.) சோளத் தவசத்தை

மாவாக அரைத்துச் செய்யும் கூழ்; food prepared from maize. சோளக்கொல்லைபொம்மை பெ. (n.) கம்பு, சோளம் முதலியவை விளையும் நிலத்தில் பறவைகளை விரட்டுவதற் காக உயரமான கழியில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் துணி அல்லது வைக்கோல் அடைத்த மாந்த உருவத்தை ஒத்த பொம்மை;

scarecrow.

சோளம் பெ. (n.) உருண்டையான தனித்தனி மணிகளைக் கொண்ட ஒருவகைத் தவசம்; maize, great millet. சோனி பெ. (n.) கினிஞ்சல்வகை; a kind of

shell.

சோறாக்குதல் வி. (v.) உணவு சமைத்தல்; to cook food, சோறுவடித்தல் வி. (v.) வி. (v.) சமைத்த சோற்றினின்று கஞ்சியை வடித்தல்;to strain conjee water from boiled rice. சோறூட்டல் பெ. (n.) குழந்தைக்கு முதன் முறையாகச் சோறூட்டுகை; first feeding of an infant with boiled rice.

த தக்கது பெ (n.) தகுதியானது; that which is fit or proper.

தக்கவைத்தல் வி. (v.) ஒன்றை இழக் காமல் தொடர்ந்து வைத்திருத்தல்;to retain (a seat, title, etc., in a contest,

election, etc.,), to subjugate.

தக்களி பெ. (n.) (கையால் பஞ்சிலிருந்து தூல் தூற்கப் பயன்படும்) கம்பியிள், மேற்பகுதியில் கொக்கிபோலக் கூர்மையாக வளைத்துக் கீழ்ப்புறம் தட்டுப் போன்ற ஒரு சிறு பகுதியை இணைத்த சிறு கருவி; kind of spindle (for spinning).