பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/283

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்தந்தை பெ. (n.) பெற்றோர்; parents. தாய்நாடு பெ. (n.) பிறந்த நாடு; mother country, native land.

தாய்ப்பால் பெ. (n.) குழந்தைக்குத் தாயினிடமிருந்து கிடைக்கும் மூலைப்பால்; milk getting from mothers

breast to a child.

தாய்ப்பாலூட்டல் பெ. (n) தாய்முலையின்

பாலைக் குழந்தைக்கு ஊட்டவ்; matermal ursing.

தாய்மாமன் பெ. (n.) தாயுடன் பிறந்தவன்; maternal uncle.

தாய்மாமன்மகன் பெ. (n.) தாயுடன் பிறந்தவனின் புதல்வன்; male son of a

mother's brother.

தாய்மாமன்மகள் பெ. (n.) தாயுடன் பிறந்தவனின் புதல்வி; daughter of a mother's brother.

தாய்மொழி பெ. (n.) பிறந்ததிலிருந்து முதலில் பழகும் மொழி; mother tongue.

தாய்வழி பெ. (n.) உறவு முறையில் தாயின் தொடர்பு: maternal side or lime. தாய்வாழை பெ. (n.) தார்விட்ட வாழை; original plantain tree which has bom fruit. தாய்வேர் பெ. (n.) ஆணிவேர்; main root, taproot.

தாயக்கட்டம் பெ. (n.) தாய விளையாட்டு ஆடுதற்குப் பயன்படும் சதுரக் கட்டம்; squares for playing dice.

தாயக்கட்டை பெ. (n.) சூதாட்டத்தில் உருட்டுங் கவறு; dice.

தாயகம் பெ. (n.) 1. அடைக்கலம்; support, shelter, place of refuge, 2. பிறந்தகம்; birthplace. தாயமாடுதல் வி. (v) 1. கவறாடுதல்; to play dice. 2. கட்டமாடுதல்; to play the child's game of tayam. தாயார் பெ. (n.) அன்னை; mctha,

தாலிக்கயிறு

275

தார் பெ.(n.) I. மாலை; garland, wreath, chaplet, 2. பூ; flower, blossom. தாரம் பெ. (n.) மனைவி;wife. தாராளக்காரன் பெ. (n.) கொடையானி; liberal, free handed person. தாராளம் பெ. (n.) மிகை ஈகைத்தன்மை; generosity, magnanimity.

தாரைக்கால் பெ. (n.) செங்குத்தானதும், தாரைபோன்றதும், பிரம்பு போன்றது மான தூண்; akind of column. தாரைவார்த்தல் வி. (v.) தன் பொருளை எல்லாம் பிறருக்கு இல்லை என்று சொல்லாமல் கொடுத்தல்; to lose, as property, 'அவன் தன் சொத்துக் களைத் தாரை வார்த்து விட்டாள். தால் டெ (n.) I. நா;tongue. 2. தாலாட்டு; குழந்தைகளுக்கான உறக்கப்பாட்டு; songs to lull a child.

தாலப்பருவம் பெ. (n.) பிள்ளைத் தமிழ் இலக்கியத்தில் தலைவனைத் தாலாட்டும் பகுதி;

portion dealing with the cradle -

songs of the hero, one of ten sections of pillai-

t-tamil. தாலாட்டுதல் வி, (v.) குழந்தைகளைத் தொட்டிலிலிட்டு உறங்கச் செய்யப் பாடும்பாட்டு; to rock achild in a cradle with lullabies.

தாலி பெ. (n.) திருமணத்தின்போது மணமகள் கழுத்தில், மணமகன் மூன்று முடிச்சுப் போட்டு இணைக்கும் மஞ்சள் கயிற்றில் தொங்கும் பொன்னணி; golden omament tied in yellow thread tied in the neck of bride by bridgegroom during solomnisation of marriage.

தாலிக்கயிறு பெ. (n.) தாலிகோத்துன்ன கயிறு; twisted thread on which is hung the tali.