பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274

தாங்கல்

தாங்கல் பெ. (n.) 1. பொறுத்தல்; enduring. 2.வலியைத் தாங்கல்; bearing pain. தாங்கற்சக்தி பெ. (n.) பொறுக்கும் வல்லமை; power of endurance.

தாங்கிநடத்தல் வி. (v.) தொண்டி நடத்தல்; to walk limpingly, hobble. தாங்குகட்டை பெ. (n.) நடக்கப் பயன்படுத்தும் தாங்கு கோல்; crutches.

தாங்குசுவர் பெ. (n.) முட்டுச்சுவர்; buttress wall.

தாங்குதல் வி. (v.) I. உதவுதல், சார்தல், பற்றுதல்; to uphold, bear up, support. 2. பொறுத்துக்கொள்ளுதல்; to endure. தாட்கோல் பெ. (n.) 1. தாழ்ப்பாள்; bolt, bar, latch. 2. திறவுகோல்; key. தாட்டுப்பூட்டெனல் பெ. (n.) 1. வெகுளிக் குறிப்பு; expr. of being angry. தாட்டுப் பூட்டென்று குதிக்கிறான்'. 2. ஆரவாரக் குறிப்பு; expr. of being pompous. 'தாட்டுப்பூட்டென்று நடக் கிறான்.

தாட்பாட்கட்டை பெ. (n.) தாழ்ப்பாளிட உதவுங்கட்டை; bar of wood, used as

bolt.

தாடி பெ.(n.) I. முகத்தின் தாழ்பகுதி;

chin.2. முகவாயில் வரும் முடி; beard.

தாடிமயிர் பெ. (n.) மோவாய் மயிர்; beard. தாடை பெ. (n.) 1. முகத்தாழ்வுப் பகுதி,

கன்னம்; cheeks, chaps. 2. தாடை யெலும்பு; jaw bone. 3. மோவாய்; chin.

தாடையெலும்பு பெ. (n.) கன்னத்தின் கீழெலும்பு;jaw bone, maxilla.

தாடைவீக்கம் பெ. (n.) காதின் கீழ்ப்புறம் தாடையிற் காணும் வீக்கம்; ordinary swelling on the sides of the jaw. தாண்டுகாலி பெ. (n.) கண்டபடி திரிபவ ன்-ள்; immoral person, as straying from virtue.

தாண்டுகோல் பெ. (n.) கிட்டிப்புள்ளில் அடிக்குங்கோல்(சென்னை); the stick used for striking in the game of tipcat. தாண்டுதல் வி. (v.) I. குதித்தாடுதல்; to dance, skip, jump. 2. இக்கட்டிலிருந்து காத்தல்; to pass over a critical period.

தாத்தா பெ. (n.) 1. தந்தையின் தந்தை

யாகிய பாட்டன்; grand father. 2. வயது முதிர்ந்தவன்; aged man.

தாம்பணி பெ. (n.) மாடுகளை வரிசை யாகப் பிணைக்கும் நீண்ட கயிறு; தாம்புக்கயிறு; tether, halter.

தாம்பு பெ.(n.) I. கயிறு;rope. 2. தாமணிக் கயிறு; rope to tie cattle, tether. 3.ஊஞ்சல்; swing.

தாமணி பெ. (n.) 1. மாடுகளைக் கட்ட

உதவும் கவையுள்ள தாம்புக்கயிறு; long line of rope with halters attached for fastening cattle. 2. மாடு, கன்றுகளின் கழுத்திற் கட்டியிருக்கும் தும்பு; headstall of a halter.

தாமரை பெ. (n.) I. கொடிவகை; lotus. 2. தாமரை மலரின் இதழ்களை ஒப்ப நிறுத்தப்பட்ட

காலாட்படை

அமைப்பு ; array of an amy arranged in the form of a lotus flower. தாமரைப்பூ பெ. (n.) தாமரைத் தண்டில் பூத்த இளஞ்சிவப்பு வண்ண இதழ்கள் கொண்ட மலர்; lotus flower.

தாய் பெ. (n.) அன்னை; mother. தாய்(க்கால்)வழி பெ. (n.) தாய்வழி

உறவுமுறைத் தொடர்பு; matemal side

or line.

தாய்ச்சி பெ. (n.) தாய்ப்பால் கொடுப் பவள்; wet nurse.

தாய்ச்சுவர் பெ.(n.) தொடர்ந்து கட்டப் பட்ட வீடுகளில் ஒரு வீட்டின் எல்லையாயமைந்து அதற்கேயுரிய முதன்மைச்சுவர்; main wall of a house. தாய்சேய் நலவிடுதி பெ. (n.) தாய்சேய் நல மருத்துவமனை; matemity and child care hospital.