பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தனித்தனி பெ. (n.) ஒவ்வொன்றாய் ஒவ்வொருவராய்;

அல்லது

தாங்கமுடியாமை

273

individually, separately, each one, singly. தனிவழி பெ. (n.) துணையற்ற வழி; lonely

தனித்திருத்தல் வி. (v.) துணையின்றித் தனிமையிலிருத்தல்; to get into

isolation.

தனித்துவம் பெ. (n.) தனித்தன்மை; வேறுபடுத்திக் காட்டும் தன்மை; individuality.

தனித்தேர்வர் பெ. (n.) தனிப்பட்ட முறையில் தேர்வு எழுதுபவர்; private

candidate.

தனிப்படை பெ. (n.) ஒரு செயற்பாட்டிற்கு ஒரு குழுவாக அமைத்து செயல் முடிக்க அனுப்பும் படை; special amy. தனிப்புறம் பெ.(n.) ஒதுங்கின இடம்; solitary place or state.

தனிப்பெரும்பான்மை பெ. (n.) முழுப் பெரும்பான்மை; absolute majority. தனிமம் பெ. (n.) ஒரு தன்மை கொண்ட அணுக்களாலான பொருள்; element. தனிமை பெ. (n.) ஒன்றியாயிருக்குத் தன்மை ; singleness, solitude. தனிமைப்படுத்துதல் வி. (v.) பிரித்து ஒதுக்குதல்; to isolate.

தனியார் பெ. (n.) தனிப்பட்டவர், தனிப்பட்டவருக்குச் சொந்தமானது; private ownership.

தனியெழுத்து பெ. (n.) கூட்டெழுத்துகள் போலன்றித் தனித்தனி பிரிந்து தோன்றும்படி, எழுதும் எழுத்து; letters written separately without being mixed with others, dist. fr. kutteluttu. தனிவட்டி பெ. (n.) கொடுத்த பணத்திற்கு ஆண்டுதோறும் கணக்கிடப்படும் வட்டி ; simple interest.

தனிவலி பெ. (n.) மகப்பேற்று வலி; labour pain.

way.

தனிவீடு பெ. (n.) 1. பக்கத்தில் வேறு வீடு இல்லாத, ஒற்றை வீடு; solitary house. 2. ஒற்றைக் குடித்தனமுள்ள வீடு; house occupied by only one tenant. தனிவெள்ளி பெ. (n.) கலப்பற்ற தூய Qaron; pure or unalloyed silver.

தா

தாக்கம் பெ. (n.) அடிக்கை, தாக்குகை, மோதுகை, முட்டுகை; attack, assault, hit.2. எதிர்தாக்குகை; reaction, counter

action.

ஒப்ப

தாக்கல் செய்தல் வி. (v.) 1. வழக்கு மன்றத்தில் வழக்கைப் பதிவு செய்தல்; filing the case, etc., 2. வரவு செலவுத் திட்டம் முதலியவற்றை டைத்தல்; to table, to submit. தாக்குப்பிடித்தல் வி. (v.) I. தாங்கி நிலைத்தல்; to withstand. 2. நிலை மைக்குத் தக்கவாறு ஈடுகொடுத்தல்; to brave.

தாகந்தணித்தல் வி. (v.) நீர்வேட்கை நீக்குதல்; to quench thirst.

தாகம் பெ. (n.) 1. உயிர்த்துன்பம் பன்னிரண்டனுள் ஒன்றாகிய நீர் வேட்கை; thirst, one 12

uyir - vadanai. 2.ஆசை; eageness, desire. தாகமாயிருத்தல் வி. (v.) நீர் வேட்கையில் இருத்தல்; to be thirst.

தாகமின்மை பெ. (n.) நீர் வேட்கையில் லாமை ;

absence of thirst - Adipsia. தாகமெடுத்தல் பெ. (n.) நீரில் விருப்பங் கொள்ளுகை; becoming thirsty. தாங்கமுடியாமை பெ. (n.) பொறுக்க முடியாமை; unbearableness as pain in

diseases.