பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திரு. தங்கம் தென்னரசு மாண்புமிகு அமைச்சர், தொழில்துறை, தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு (ம) தொல்லியல் துறை செய்மைலே வெல்லும் தலைமைச் செயலகம் GLEGIT 606-600 009. வாழ்த்துரை தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும் -மகாகவி பாரதியார் தொல்பொருள் ஆய்வின்வழி மட்டுமல்லாது சொல்பொருள் ஆய்வின் வழியும் ஓரினத்தின் சமூக நிலை, பழக்கவழக்கம், பண்பாட்டுக் கூறுகள், அயலக வணிகத் தொடர்பு ஆகியவற்றை அறியமுடியும். இதிலிருந்து சொற்களையும் மொழியையும் காக்க வேண்டியதன் தேவையை நாமறியலாம். மொழி அறிஞர் எஸ்பெர்ஸன் "மனிதன் முதலில் தான் கண்ட பொருளுக்குப் பெயர் வைக்கத் தெரியாத விலங்கு நிலையில் இருந்தான். தன் இனத்தவருடன் பேச இயலாதவனாக இருந்தான். பின்னர் நாளடைவில் தன் பட்டறிவைப் பிறரிடம் சொல்வதற்காக அப்பொருளின் உருவத்தினைச் சித்தரித்துக் காட்டினான். பின்னர் தன் செய்கையால் தெரிவித்தான், அதன்பின் ஒலி வடிவில் ஒலிக்குறிப்பை எழுப்பினான். அடுத்து பொருளுக்கு ஒர் எழுத்து இட்டு எழுத முடியாமல் பேச்சு வகையால் சொற்றொடர்களைக் குறிக்க அடையாளம் தந்தான். இங்ஙனம் மொழி உருவானது" என்று தன் ஆராய்ச்சி நூலில் விளக்கமாகக் கூறியுள்ளார். இக்கூற்றிலிருந்து மொழி என்பது மக்களினத்தின் வளர்ச்சி வரலாற்றை விளக்கும் காலக்கண்ணாடி என உணரலாம். ‘புதிய புதிய துறைகள் தோன்றுந்தொறும், ஏராளமான கலைச்சொற்கள் தோன்றுதற்கும், வழங்கும் சொற்களில் புதிய பல பொருள்கள் இணைந்து விரிவடைவதற்கான சூழ்நிலையில் அகரமுதலி மிகவும் இன்றியமையாத நூலாகிறது' என்று 1974இல் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககத்தை உருவாக்கி மேனாள் மாண்புமிகு முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் எடுத்துரைத்தார்கள். இதுபற்றி மாண்புமிகு முதலமைச்சர் தளபதி திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் மிகுந்த அக்கறை கொண்டு, செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் ஒரு செயலியை உருவாக்கி, அதன்வழி பல்வேறு துறைசார்ந்த வல்லுநர் குழு அமைத்து புதிய கலைச்சொற்களைத் திரட்டி சொற்குவையில் பதிவேற்றம் செய்யலாம் என்று அறிவுறுத்தினார்கள் என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.