பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

330

படிக்குப்படி

for his daily food. 2. படி கொடுப்போன்; one who grants batta. படிக்குப்படி பெ. (n.) ஒவ்வொரு படியாக முன்னேறுதல்; step by step, in an ascending series.

படிக்குப்பாதி பெ (n.) சரிபாதி; exactly half, படிக்கூண்டு பெ. (n.) மெத்தைப் படிக் கட்டுக்கு மேல்முகடாகக் கட்டப் படும் கட்டடம்; stairhead, masonry hood covering the top of a flight of stairs leading to a flat roof.

படிகட்டுதல் வி. (v.) 1. உணவுக்கு வேண்டிய பணத்தைச் செலுத்துதல்; to pay daily allowance. 2. நிறைத்தடை கட்டுதல்; to put allowance weight in the scale of a balance. 3. மாடிப்படி கட்டுதல்; to construct steps or stairs, படிகமணி பெ. (n.) கடைத்த படிகக் கற்களால் அமைந்த கழுத்தணி; a necklace made of crystals. படிகொடுத்தல் வி. (v.) படியளித்தல்; giving stated allowance. படிச்செலவு பெ. (n.) நாட்செலவு: daily

expense.

படித்துறை பெ. (n.) படிக்கட்டுக் களமைந்த நீர்த்துறை; bathing ghat; a flight of steps leading down to a river a with steps.

படிதல் வி. (v.) 1. அடியிற்றங்குதல்; to settle as dust or sediment. 2. தங்குதல்; to rest. 3. கீழ்ப்படிதல்; to obey. 4. வணக்கக் குறியாகக் கீழே விழுதல்; to fall prostrate.

படிப்படியாய் வி.எ. (adv.) சிறுகச் சிறுக; tp by step, gradually,

படிப்பணம் பெ. (n.) தாள் செலவுக்குக் கொடுக்கும் பணம்; some amount given for daily expenses.

படிப்பாளி பெ. (n.) கற்றோன்; கல்வி வல்லவன்; aman of leaming.

படிப்பு பெ. (n.) 1, கல்வி; leaming, study, 2. படித்தல்; reading, recitation, 3. பாடுகை; chanting, singing, 4. கற்பித்தல்; instruction teaching. 5. ஒரு துறைத்தேர்ச்சி; a course of study discipline.

படிப்புக்காரன் பெ. (n.) 1. ஒரு துறையில் திறையப் படித்துத் தேர்ச்சிப் பெற்றவர்; well read person, scholar. 2. கோயிலில் தொன்மம் கேட் போன்; prsan who attends a temple to hear the purana chanted 3. நுண்ணுத் திக்காரன்; சூழ்ச்சிக்காரன்; cunning, scheming.

படிமானம் பெ. (n.) 1. அமைவு; tractsble; docility, 2. தணிவு: alleviation. 3, சட்டப் பலகைகளின் இணைப்புப் பொருத்தம்; close fitting of planks in carpentry.

படிமுடிச்சு பெ. (n.) மிகவும் இறுக்கமான முடிச்சு; a tight knot.

படிமேடை பெ. (n.) படிப்படியாயுயர்ந் தமைந்த இருக்கை வரிசை; gallery. படியரிசி பெ. (n.) உணவுக்காகக் கொடுக்கும் அரிசி; rice given as subsistance allowance.

படியவைத்தல் வி. (v.) I. படியும்படி வைத்தல்; to flatten or straighten olai or warped boards by placing weights over them. 2. ஊன்றுதல்; to plant firmly, as one's feet in walking. 3. அடங்கச் செய்தல்; to subdue as a country.

படியளத்தல் வி. (v.) 1. உயிர்வாழ்வதற்

குரியனவற்றை அளித்தல்; to supply for subsistance. 2. உயிர் வாழ்வதற்குப் படி கொடுத்தல்; to measure out grain on account of wages, to make or pay allowances for one's maintenance.

படியாள் பெ. (n.) 2. படி வாங்கிப் பயிரிடும்

குடியானவன்; hired servant one whose