பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/414

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406

முன்னேறுதல்

முன்னேறுதல் வி. (v.) I. தடையைக் கடந்து முன் செல்லுதல்; make headway against. 2. விளையாட்டுப் போட்டி களில் அடுத்த சுற்றில் நுழைதல் அல்லது அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறுதல்; move on to the next stage. முன்னைய பெ.அ. (adj.) முந்திய;previous. முன்னைய ஆண்டுகளைவிட இந்த ஆண்டு நல்ல மழை பெய்துள்ளது'. முன்னோக்கி வி.அ. (adv.) 1. முன் பக்கத்தை நோக்கிச் செல்வதாக; thrusting forward. 'முன்னோக்கிய செயல்; பாய்ச்சல்'. 2.வருங் காலத்தைக் கருத்தில் கொண்டு; looking forward. முன்னோக்கிய பார்வையே முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்'.

முன்னோட்டம் பெ. (n.) பின்னர் பெரிய அளவில் நடக்கவிருப்பது எப்படி யிருக்கும் என்பதை உணர்த்தும் வகையில் மாதிரி நிகழ்வாகச் செய்யப்படுவது, ஒன்றின் செயல்பாடு முதலியவற்றைத் தெரிந்துகொள்ளும் பொருட்டு நிகழ்த்தப்படும் மாதிரி; trial, preview, trial run.

முன்னோடி பெ. (n.) I. ஒருவரின் அல்லது ஒன்றின் வளர்ச்சிக்கு அடிப்படை யாகக் கடந்த காலத்தில் இருந்த ஒன்று அல்லது ஒருவர்; pioneer, precursor. 'நாடகத்தின் முன்னோடி தெருக்கூத்து என்று அவர் குறிப்பிடுகிறார். 2. முன் மாதிரியாக உள்ள ஒன்று அல்லது ஒருவர் பின்பற்றக்கூடியது; worth following, model. அப்துல்கலாம் அவர்கள் இன்றைய இளைய தலைமுறைக்கு ஒரு முன்னோடியாக விளங்குகிறார். முன்னோர் பெ.(n.) மாந்த இனத்தின் முந்தைய காலத்தில் வாழ்ந்தவர்கள்;

ஒரு மரபின் மூதாதையர்; forefathers, ancestors. 'என்னுடைய முன்னோர் களைப் பற்றி விசாரித்த போது பல சுவையான தரவல்கள் கிடைத்தன். முனகல் பெ. (n.) வலி, காய்ச்சல் போன்றவற்றால் எழுப்பும் மெல்லிய ஓசை; groan. 'குழந்தையின் முன் கலைக் கேட்டு விழித்துக் கொண் டாள்.

முனகுதல் வி. (v.) I. விருப்பமின்மை, எதிர்ப்பு, சலிப்பு முதலியவற்றை வெளிப்படுத்தும் வகையாக தெளி வற்ற வகையில் மெல்லிய குரலில் பேசுதல்; mutter (as a protest, etc.,). வாய்க்குள்ளேயே முனங்காதே, சத்தமாகப் பேசு' . 2. பாட்டு, மெட்டு போன்றவற்றை வாய்க்குள்ளே முணுமுணுத்தல்; hum. 'ஏதோ ஒரு பழைய பாட்டை முனகிக்கொண்டு வந்தான்.

முனங்குதல் வி. (v.) முனகுதல் பார்க்க. முனி பெ. (n.) 1. முனிவர்; sage, ascetic. 'அகத்திய முனி'. 2. பேய்; ghost, evil, spirit. அந்த ஆலமரத்தில் முனி இருக்கிறதாமே?'. முனைதல் வி. (v.) I.

செயலில்

கவனத்துடன் ஈடுபடுதல்; be busy doing, be engaged. 'நான் செலவிற் (பயணத்துக்) கான ஏற்பாடுகளில் முனைந்திருந்தேன்' . 2. ஒன்றுக்காக முயற்சி மேற்கொள்ளுதல் அல்லது முயலுதல்; take efforts, attempt. ஒன்றைப் பற்றிச் சிந்திக்க முனையும் போதுதான் அதில் உள்ள சிக்கல்கள் புரியும்'.

முனை பெ. (n.) 1. முள், ஊசி முதலிய வற்றின் கூர்மை; tip, edge. 'கத்தியின் முனைமழுங்கியிருக் கிறது'. 2. ஓரம், கோடி, விளிம்பு; comer. 'மிசையின் (மேஜையின்) முனை இடித்து விட்டது'.3.நீளமோ, உயரமோ கொண்ட ஒரு பொருளின் அல்லது