பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னதாக வி.அ. (adv.) குறிப்பிடப்படும் நேரத்திற்கு அல்லது குறிப்பிடப்படு வதற்கு முன்பு; before, previously. முன்னாடி வி.அ. (adv.) முன்னால் பார்க்க. முன்னால் வி.அ. (adv.) முன்பக்கமாக; forward, to the front. கதவை முன்னால் தள்ளு. முன்னிலைப்படுத்துதல் வி. (v.) பலருக்கு இடையில் ஒருவருக்குச் சிறப் பளித்தல்; give prominence to. கட்சியில் தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்வதில் அவர் மிகுந்த முனைப்புடன் இருந்தார். முன்னுக்கு வி.அ. (adv.) முன்பாக; forward. 'நாற்காலியைச் சற்று முன்னுக்கு இழுத்துப்போடு'.

முன்னுக்குக் கொண்டுவருதல் வி. (v.) ஒன்றை அல்லது ஒருவரை முன்னேற் றுதல்; cause to come up, help (someone rise in the world). 'நீ நன்றாக படித்துக் குடும்பத்தை முன்னுக்குக் கொண்டு வரவேண்டும்'.

முன்னுக்குவருதல் வி. (v.) ஒருவர் வாழ்க் கையில் உயர்ந்த நிலைக்கு வருதல் அல்லது முன்னேறுதல்; come up, progress or advance in life. முன்னுரிமை பெ. (n.) சிறப்பு, தேவை முதலியவற்றைக் கருதி அளிக்கப் படும் அதிகமான சிறப்பு அல்லது உரிமை; priority. அரசின் திட்டங் களில் வேளாண்மைக்கு முன்னுரிமை தரப்படுகிறது.

முன்னெச்சரிக்கை பெ. (n.) இயற்கைப் பேரழிவு, கலவரம், நேர்ச்சி போன் றவை நிகழாதவாறு செய்யும் ஏற்பாடு; precaution.

முன்னெடுத்தல் வி. (v.) ஒன்றுக்கு மட்டும் மிகுந்த சிறப்பளித்து உயர்நிலை அடையச் செய்வதற்காகத் விரை வாகச் செயல்படுதல்; advance (a cause,

முன்னேற்றுதல்

405

மக்களின்

etc.,). பின்தங்கிய உரிமைகளுக்கான போராட்டங்களை நாம் முன்னெடுப் போம்'.

முன்னே வி.அ (adv.) முன்னால், முன்னர்; ago, earlier, ahead. 'முன்னே பார்த்த தற்கும் இதற்கும் நிறைய வேறுபாடு உள்ளது.

முன்னே பின்னே வி.அ. (adv.) I. ஒருவ ருடைய எதிர்பார்ப்பின்படி துல்லிய மாக இல்லாமல் சிறிது கூடவோ குறைந்தோ ; not exactly what one might expect. 'விலை கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும் சரி நிலத்தை வாங்கிவிடலாம்'. 2. குறிப்பிடப் படும் சூழலில் இதற்கு முன்னால்; at any time earlier, previously. 'முன்னே பின்னே தெரியாதவனோடு நீ பேச வேண்டாம்.

முன்னேற்பாடு பெ. (n) தடவடிக்கை செயல் போன்றவற்றிற்காக முன் கூட்டியே செய்யும் ஆயத்தப் பணி; preparatory, work, preliminaries. ஊருக்குச் செல்வதற்கான முன்னேற் பாடுகளைச் செய்யத் தொடங் கினாள்.

முன்னேற்றம் பெ. (n.) இருக்கும் நிலையை விட உயர்ந்த நிலை அல்லது வளர்ச்சியடைந்த நிலை; மேம்பாடு; progress, betterment, improvement. 'பையனுடைய படிப் பில் எந்தவித முன்னேற்றமும் இல்லை என்று அவர் வருத்தப் பட்டார்.

முன்னேற்றுதல் வி. (v.) உயர்நிலையை அடையச் செய்தல் மேம்படச் செய்தல்; to make advance. பொருளியல்துறையில் நாட்டை முன்னேற்றத் திட்டங்கள் போடப் பட்டுள்ளன.