பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/412

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

404

முன் நிபந்தனை

முன் நிபந்தனை பெ. (n.) முன்கூட்டியே விதிக்கும் கட்டுப்பாடு; precondition. முன்நில்தல் வி. (v.) பொறுப்பை ஏற்க

முன் வருதல்; take the initiative. முன்நிறுத்துதல் வி. (v.) ஒருவரை அல்லது ஒருகருத்தை அல்லது ஒரு செய்தியை முதன்மைப்படுத்துதல்; bring to the fore, project some one, keep something in focus.

முன்பகை பெ. (n.) கடந்த காலப் பகை அல்லது மனக்கசப்பு; enmity. முன்பகையை மனத்தில் வைத்துக் கொண்டு அவர் உனக்கு இடையூறு செய்யலாம்.

முன்பணம் பெ. (n.) முடிவு செய்யப்பட்ட தொகையில் முன் கூட்டியே தரப்படும் சிறுதொகை; advance payment. 'அவர் முன்பணம் வாங்கிக் கொண்டு போயிருக்கிறார். முன்பதிவு செய்தல் வி. (v.) திரையரங்கு, தொடரி,பேருந்து போன்றவற்றில் முன்கூட்டியே இருக்கைகளைப் பதிவு செய்தல்; reserve (seats, etc.,) ina cinema, train, bus, etc.,). முன்பிணை பெ. (n.) எதிர்பார்ப்புப் பிணையல் (ஜாமீன்); anticipatory bail. முன்பின் தெரியாத பெ.அ. (adj.) பழக்கம் இல்லாத, அறிமுகம் இல்லாத; unfamiliar, unacquainted, unknown, strange. 'என் அண்ணன் முன்பின் தெரியாத ஆட்களிடம் கூட இயல்பாகப் பேசுவார்.

முன்பின் யோசிக்காமல் வி.அ. (adv.) விளைவுகளை எண்ணிப்பார்க் காமல்; thoughtlessly, without forethought. 'முன்பின் யோசிக்காமல் இந்தச் செயலில் இறங்கிவிடாதே'. முன்புறம் பெ. (n.) ஒன்றின் முன்னுள்ள இடம், முன்பக்கம்; the area in front,

the front part. 'கோயிலின் முன்புறம் கடைகள்கட்டப்பட்டுள்ளன.

முன்மாதிரி பெ. (n.) 1. கட்டடம், சிலை, எந்திரம் போன்றவற்றை எப்படி உருவாக்குவது அல்லது அமைப்பது என்பதற்காகச் சிறு அளவில் முதலில் உருவாக்கப்படுவது; model, miniature. 2. ஒரு செயலைப் பின்பற்றும் வகை யில் எடுத்துக்காட்டாக அமையும் ஒருவர்; examplery, worth following, model. இளம் அறிவியலாளர்களுக்கு அவர் நல்ல முன்மாதிரி.

முன்மொழிதல் வி. (v.) நெறிமுறை களுக்கு உட்பட்டு நடக்கும் கூட்டத்தில் ஒரு பதவிக்கு ஒருவரின் பெயரை முன்னெடுத்தல்; propose (someone's name, a resolution, etc., for consideration at a formal meeting).

முன்யோசனை பெ. (n.) ஒன்றின் விளைவு குறித்து அல்லது நடக்கப்போவது குறித்து அணியமாக இருப்பதற்கு ஏற்ற வகையில் முன்னரே செய்யும் சிந்தனை ; forethought, thoughtfulness. முன்விரோதம் பெ. (n.) முன்பகை பார்க்க.

முன்வைத்தல் வி. (v.) 1. கேள்வி, கோரிக்கை போன்றவற்றை ஒரு வருடைய கவனத்திற்குக் கொண்டு வருதல்; propose, put forward (resolution, demand, etc.,). 2.சான் றாகவோ ஆராய்வதற்கு அடிப்படை யாகவோ ஒன்றை எடுத்துக் கொள்ளுதல்; have something as a theme. முன்னங்கால் பெ. (n.) விலங்குக்குக் கழுத்தையொட்டி அமைந்திருக்கும் கால்; (of animals) foreleg. முன்னங்கை பெ.(n.) மணிக்கட்டுக்கும், கைமூட்டுக்கும் இடைப்பட்ட பகுதி, முழங்கை; foream.

முன்னணி பெ. (n.) விளையாட்டு, தேர்தல் போன்றவற்றில் வெற்றிக் கான வாய்ப்பு நிலை; position ahead (of others), leading position.