பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/423

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேழித்தோரணம் பெ. (n.) தென்னங் குருத்தோலையில் ஏர்க்கலப்பை வடிவில் கீறி, பிள்னவிட்டு வரிசை யாகக் கட்டப்படும் தோரணம் (கல்வெட்டு); festoons made with tender palm leaf, like plough shape and

hang in a row.

மேளக்கச்சேரி பெ. (n.) அரங்கில் மேளத்துடன் கூடிய இசை நிகழ்ச்சி ; entertainment given by drum beater. மேளக்காரன் பெ. (n.) 1. மேளம் வாசிப்போன்; piper, drummer. 2. இசை செய்விக்கும் குலத்தவர்; person belonging to a caste of musician. மேளமடித்தல் வி. (v.) I. தவில் அடித்தல்; to beat the drum. 2. ஒத்துப்பேசுதல்; to play second fiddle, to endorse slavishly. மேனாமினுக்கி பெ. (n.) எப்போதும் அழகுபடுத்திக்கொண்டு திரிபவ-ன்- ள்; pcrson gaudily dressed, fop.

மை

பெ. (n.)

I - இருள்; darkness. 2. பெரும்பாலும் பெண்கள் கண்ணில் தீட்டிக்கொள்ளப் பயன்படுத்தும் ஒட்டும் தன்மையுடைய கருப்பு நிற அழகுப் பொருள்; black pigment. மைக்கூடு பெ. (n.) 2. எழுதும் மை வைக்குங் கூடு; ink bottle, ink pot. 2. கண்மைச் சிமிழ்; small casket for keeping black pigment.

மையிருட்டு பெ. (n.) காரிருள்; pitch darkness.

மொ

மொக்கைபோடுதல் விட (v.) தேவையற்ற பேச்சு; useless talk.

மொக்கையன் பெ. (n.) 1. மிகப்பருத் தவன்; தடியன்; stout man. 2. அறிவு மழுங்கியவன்; dullard.

மொச்சடித்தல் வி. (v.) தீய நாற்றம் வீசுதல்; to emit a foul smell, as ponts.

மொண்டிக்காரன்

415

மொச்சையடித்தல் வி (v.) தயிர் முதலியன தீய நாற்றம் வீசுதல்; to emit a bad odour, as rencid curd, etc.,

மொசிதல் வி. (v.) மொய்த்தல்; to swam. மொகமொகத்தல் வி. (v.) 1. தின வெடுத்தல்; to feel an itching sensation. மொசுமொசெனல் பெ. (n.) I. வண்டு முதலியன மொய்த்தற் குறிப்பு; onom. expr. of swarming, as of bees.

மொட்டை பெ. (n.) 2. (தலையில்) முடி முழுவதுமாக மழிக்கப்பட்ட நிலை;

shaved or hairless state. 2. மொட்டை

வடித்திருக்கும் ஆன்; man with tonsured head. 3. மரம், செடி அல்லது பரப்பிடம், பொருள்கள் முதலிய வற்றில் அவற்றிற்குரிய குறிப்பிட்ட பொருளே இல்லாதிருத்தல்; barrenness, incompletion, baldness. 4. கேள்வி, விடை போன்றவற்றில் குறிப்பிட்ட தேவையான விளக்கம் இல்லாதிருத்தல்; want of necessary

debils.

மொட்டைப்பையன் பெ.(n.) மணமாகாத இளைஞன்; unmarried man, used in contempt. மொட்டையடித்தல் பெ. (n.) 2. மரம் முத தலியவற்றில் கிளை மற்றும் இலைகளை முழுவதுமாக நீக்கிய நிலை; removed branches and leaves state, 2, ஒருவரின் பொருள், பணம் முதலியவற்றை மற்றர் முழுவதுமாக இல்லாமல் செய்தல்; make someone bankrupt.

மொடமொடப்பு பெ. (n.) 1. விறைப்புத் தன்மை; stiffnes. 2. உலர்ந்த தோல் முதலியவற்றின் குறிப்பு: rustling sound as of dried skin, starched cloth. மொண்டிக்காரன் பெ. (n.) 1. முரண்டு செய்வோன்; refractory man.