பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/422

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

414

மேடிடுதல்

மே

மேடிடுதல் வி.(n.) மண்ணால் பள்ளம் நிரப்பப்படுதல்; silt up.

மேடு பெ. (n.) 1.நிலத்தில் சுற்றி இருக்கும் பரப்பை விட உயரமான பகுதி; rised ground. 2. உள்ளங்கையில் புடைப்பாக இருக்கும் பகுதி; mount. மேடையேறுதல் வி. (v.) 1. நாடகம், நாட்டியம் முதலியன மேடையில் நிகழ்த்தப்படுதல்; (of drama, dance, etc.,) be staged. 2. இசைப்பாட்டு, பேச்சு முதலியவற்றை நிகழ்த்துவதற் காக மேடையில் ஏறுதல்; be on the

stage.

மேதகு பெ. (n.) பெரும்பாலும் மாநில ஆளுநரைக் குறிப்பிடுவதற்குப் பயன் படுத்தப்படும் மதிப்புச் சொல்; fom of address for the Governor of a state. மேம்படுத்துதல் வி. (v.) இருக்கும் நிலையை விட உயர்வான (அ) சிறப்பான நிலையை அடையச் செய்தல்; uplift, better, develop.

மேம்படுதல் வி. (v.) இருக்கும் நிலையை

விட உயர்ந்த நிலையை அடைதல்; reach a better state.

மேய்த்தல் வி. (v.) கால்நடைகளை மேய்ச்சல் நிலங்களில் மேயச் செய்தல்; to craze the cattle in the

posture to feed.

மேய்தல் வி. (V.) கால்நடைகள் நிலத்தில் முளைத்திருக்கும் புற்களை அலைந்து திரிந்து தேடித் தின்னுதல்; mostly of cattle graze in the fields. மேல்தாடை பெ. (n.) கீழ்த்தாடைக்கு மேலாக அமைந்த தாடை; the upper

jaw. மேல்வரிசை பெ. (n.) 1. மேலிடமாக அமைந்துள்ள வரிசை; upper row.

2. செங்கற் கட்டடத்தில் எழுதகத் துக்கு மேலுள்ள படைச்சுவர்; blocking course, upper layer in masonry. மேல்விசாரணை பெ. (n.) 1. கண் காணிப்பு; superintendence, inspection. 2.மேற்கொண்டு செய்யும் புல னாய்வு; further enquiry or trial, retrial, rehearing.

மேல்விரிப்பு பெ. (n.) மழைக்காகவோ, சூரிய ஒளி மறைப்புக்காகவோ மேலாகக் கட்டும் துணி; an awning. மேல்வீடு பெ. (n.) 1. தரையில் அமைத்த அறைகளுக்கு மேல் அறைகள் அமையுமாறு கட்டப்பட்ட வீடு, மெத்தை வீடு; storeyed house. மேலாண்மை பெ. (n.) பிறரைக் கட்டுப் படுத்தக்கூடிய வலு, மேலாளுமை, மேலோங்கிய நிலை; dominance, suzerainty.

மேலாதிக்கம் பெ. (n.) முறையற்ற அதிகாரம், கட்டுப்படுத்தி ஆளும் அதிகாரம்; hegemony, domination. மேலிடம் பெ. (n.) செயற்பாடுகளை ஆய்வு செய்யும் உயர்மட்ட அமைப்பு அல்லது குழு; decision making body, high level authority.

மேலுரம் பெ. (n.) பயிர் நட்ட பிறகு இடப்படும் உரம்; (of application of fertilizer) top dressing.

மேலெழுதல் வி. (v.) 1. மேற்கிளம்புதல்; to rise up. 2. மிதத்தல்; to float. 3. மேம்படுதல்; to be superior. மேலேழுந்தவாரி பெ. (n.) ஊன்றிக் கவனியாமை; superficially.

மேழி பெ. (n.) 1. கலப்பை; plough. 2. கலப்பையின் கைப்பிடி; plough tail, handle of a plough.

மேழிச்செல்வம் பெ. (n.) வேளாண்மை யால் வருஞ் செல்வம் ; wealth derived from husbandry.