பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/421

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மெதுவடை பெ. (n.) உளுந்து மாவால் செய்த வடை; a kind of vadai made of black gram paste.

மெதுவாக வி. (v.) I. விரைவோ, முடுக்கமோ இல்லாமல் குறைவாக; slowly, unhurriedly.2. ஒலி அதிகம் இல்லாத; softly.

மெய்க்கடுப்பு பெ. (n.) உடல் முழுவதும் தோன்றும் வலி; pain all over the body. மெய்கவசம் பெ. (n.) உடலிலிடும் காப்புச்சட்டை; coat ofmail, amour. மெய்காட்டுதல் வி. (v.) நேரில் வந்து தோன்றுதல்; to mark one's presence, to attend personally, to appear.

மென்னீர்

413

மெய்ப்பித்தல் வி. (v.) எண்பித்தல், நிறுவுதல்; to prove, substantiate.

மெய்ப்பு பெ. (n.) திருத்தங்களை மேற்கொள்வதற்காக, இறுதி அச்சு வடிவம் பெறுவதற்கு முந்தைய அச்சுப்படி; proofs.

மெய்ப்புப்பணி பெ. (n.) அச்சுப்படிகளை ஒப்பிட்டுப் பார்க்கும் பணி; proof reading work.

மெய்ப்பூச்சு பெ. (n.) உடலின் மேல்பூசும் கலவைச் சாந்து முதலியன; fragrant paste.

மெய்காவல் பெ. (n.) கோயிற்காவலர்; மெய்ம்மறத்தல் வி. (v.) 1. அறிவு நீங்குதல்;

temple guard.

மெய்காவலர் பெ. (n) முகாமையான மாந்தரின் பாதுகாப்புக்காக அமர்த் தப்படும் காவலர்; body guard. மெய்கீர்த்தி பெ. (n.) அரசனுடைய

கொடிவழி, அடைந்த வெற்றி, ஆட்சிக்காலம் முதலியவற்றைப் பாடல் வடிவில் கல்லில் பொறித்த வரலாற்றுச் செய்தி; the details relating to the genealogy, victories, etc., of a king in the form of verse inscribed on stone. மெய்சிலிர்த்தல் வி. (v.) வியப்பு, மகிழ்ச்சி முதலியவற்றால் கிளர்ச்சி அடைதல்;

be enthralled. மெய்(ஞ்)ஞானம் பெ. (n.) மெய்ப் பொருளைப் பற்றிய அறிவு; உண்மை யான அறிவு; true knowledge. மெய்(ஞ்)ஞானி பெ.(n.) மெய்ப்பொருள் கொள்கைகளை உருவாக்குபவர்; philosopher.

மெய்ப்பாடு பெ.(n.) I. உடல் வழியான வெளிப்பாடு; physical manifestations of emotions. 2. உண்மை; truth.

to

swoon,

lose consciousness.

2.மயக்கமடைதல்; faint.

மெருகு பெ. (n.) ஒரு பொருள் புதிதாக இருக்கும்போது காணப்படும் பளபளப்பு; பொலிவு; brightness.

மெல்லுதல் வி. (v.) உணவுப்பொருள் முதலியவற்றைப் பற்களால் கடித்து அரைத்தல்; masticate.

மெழுகு பெ. (n.) கொழுப்பிலிருந்து (அ) எண்ணெயிலிருந்து உருவாக்கப்படு வதும் வெப்பத்தில் உருகுவதுமான பொருள்; wax.

மென்பொருள் பெ. (n) கணிப்பொறியை இயக்குவதற்கான கட்டளை நிரல் களின் தொகுப்பு; software. மென்மை பெ. (n.) தொடுவதற்குப் பஞ்சு போல இருக்கும் தன்மை; sofness,

tenderness.

மென்னீர் பெ. (n.) சுண்ணாம்புச் சத்து குறைவாக இருப்பதால் வழலை நுரைக்கும் தன்மையுடைய நீர்; soft

water.