பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/435

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வலஞ்சுழித்தல் வி. (v.) வலமாகச் சுற்றச்

செய்தல்; to cause to whirl to the night. வலதுகை பெ. (n.) 1. வலது கையால் செய்யும் பழக்கமுடையவர்; right handedness. 2. ஒருவருக்குப் பக்க பலமாக இருந்து உதவுபவர்; person who helps.

வலம்புரிச் சங்கு பெ. (n.) வலப்புறமாகச் செல்லும் சுழியை உடைய சங்கு; conch with clockwise whorls.

வலம் வருதல் வி. (v.) இடவலமாகத் திருக்கோயிலைச்சுற்றி வருதல்; togo round from left to right, as of a temple. வலித்தல் வி. (v.) I. கட்டாயப்படுத்துதல்; to force, compel. 2. பற்றிக் கொள்ளுதல்; to scize. 3. துடுப்பு, கயிறு முதலியவற்றை இழுத்தல்; to draw, pull to attract. 4. உடல் உறுப்புகளில் வலி உணர்தல்; pain,

hurt.

வலித்துக்கட்டுதல் வி. (v.) (கயிற்றை) இறுக்கிக் கட்டுதல்; to tie after tightening the rope.

வலித்துக்காட்டுதல் வி. (v.) பிறரை தக்கல் செய்யும் வகையில் விரலை ஆட் டுதல்; வாயைக் கோணிப் பேசுதல்; to make faces at someone. வலிந்துகொள்ளுதல் வி. (v.) 1. வலுக் கட்டாயமாகக் கைப்பற்றுதல்; to annex by force. 2. இடர்ப்பட்டுப் பொருள் கொள்ளுதல்; to strain, as in interpretation, to understand with great difficulty.

வலிந்துவந்து பேசுதல் வி. (v.) பிறர் விருப்பமின்றி தானாகவே முன்வந்து பேசுதல் ; to voluntarily to a person who is not willing to talk. வலிந்துவலிந்துபேசுதல் வி. (v.) ஒரு திட்டத்தை (அ) கருத்தை வற்புறுத் திப் பேசுதல்; to talk a subject or plan emphaticaly.

வலிப்பு பெ. (n.) திடீரென்று கட்டுப் படுத்த முடியாத அளவுக்குக் கை

கால்கள் இழுக்கும் இசிவு; convulsion,

fit.

வலுக்கட்டாயமாக

427

வலிபடுதல் வி. (v.) I. வலிமையுறுதல்; to become strong. 2. மாறுபடுதல்; to compete, rival. 3. பற்றியிழுக்கப் படுதல்; to be drawn, dragged. வலிமைசெய்தல் வி. (v.) வலவந்தப் படுத்துதல், கட்டாயப்படுத்துதல்; to force, compel.

வலியச் செய்தல் வி. (v.) ஒரு செயலை வலுக்கட்டாயமாகச் செய்தல்; to do an action forcefully.

வலியச் சென்றுபேசுதல் வி. (v.) ஒருவர் பேசாத சூழலிலும் தானாகச் சென்று பேசுதல்; to speak voluntarily to a person, who is not willing to talk. வலியவன் பெ. (n.) I. வலிமையுள்ளவன்; strong and sturdy man. 2. திறமை யாளன்; capable or able man, expert, a dept.

வலியறிதல் வி. (v.) பகைவனுடைய வலிமையைத் தெரிந்து கொள்ளுதல்; judging or sensing the strength of one's enemy.

வலியுறுத்துதல்' வி. (v.) 1. உறுதி கூறுதல்; to affim, assure. 2. கோரிக்கையை வற்புறுத்துதல்; to emphasise. வலியுறுத்துதல்' வி. (v.) ஒரு கருத்து, எண்ணம், கோரிக்கை முதலிய வற்றை அழுத்தம் தந்தோ மீண்டும் மீண்டும் சொல்லியோ கவனத்திற்கு உட்படுத்துதல்; stress., affim. வலிவுகொடுத்தல் வி. (v.) நோயினால் உடல் வலிமை குன்றிய பொழுது ஆற்றலூட்டும் சொற்களைக் கூறுதல்; to speak gentle and warm words to reoccupate one's illness.

வலிவூட்டுதல் வி. (v.) கருத்து போன்ற வற்றை உறுதிபடுத்துதல், வலியுறுத் துதல்; support, strengthen. வலுக்கட்டாயம் பெ. (n.) I. வலியுறுத்தல்; force, coercion. 2, வல்லந்தம்; compulsion. வலுக்கட்டாயமாக வி. (v.) விருப்ப மில்லாதவற்றைச் செய்வதற்கு