பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/444

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

436

வாய்கட்டுதல்

போனவர்களின் வாயைக் கட்டுதல்; if the mouth remains opened after death a bandage is applied over the mandible closing it. 4. வாய் திறவாதபடி செய்தல்; by witchcraft the mouth is tied and cannot be opened, (in magic). வாய்கட்டுதல் வி. (v.t.) 2. பேசாதிருக்கச் செய்தல்; to silence. 2. மந்திரத்தால் தச்சுயிரிகளின் வாயைத் திறவாமல் பண்ணுதல்; to charm as a snake or beast, so as to prevent its opening its mouth. 3. மதிப்புரவுக் குறிப்பாக ஆடையால் வாயை மூடுதல்; to cover one's mouth with cloth as a mark of respect.

வாய்க்காக பெ. (n.) 1. பிணத்தின் வாயில் வாய்க்கரிசியுடன் வைக்கும் பணம்; money placed on the mouth of a corpse with vaykkarisi. 2. கையூட்டு; bribe, tip. வாய்காட்டுதல் வி. (v.) 1. அதிகப் படியாகப் பேசுதல்; to wag one's tongue, 2. கெஞ்சுதல்; to cringe. வாய்க்காரன் பெ. (n.) 1. பேச்சில் வல்லவன்; clever speaker, talkative man. 2. செருக்கால் மிதமிஞ்சிப் பேசுவோன்; man who is arrogant in speach. 3. பிறரைத் திட்டும் இயல் புள்ளவன்; man given to scandal mergring,

வாய்க்காரி பெ. (n.) I. பேச்சில் வல்லவள்; clever speaker, talkative

woman. 2. செருக்கால் மிதமிஞ்சிப்

பேசுபவள்; woman who is arogant in speach. 3. பிறரைத் திட்டும் இயல் புள்ளவள்; woman given scandalmongering.

to

வாய்க்கால் பெ. (n.) கால்வாய்; course, charnel, caral. வாய்க்காலுக்குப்போதல் பெ. (n.) மலங் கழித்தல்; lit, to go to a channel, to go to stool.

வாய்க்குட் பேசுதல் பெ. (n.) முணு முணுத்தல்; to mumble, mutter, murmur.

வாய்க்கு வந்தபடி வி.எ. (adv.) வரன்முறை இல்லாமல் மனம் போனபடி பேசுதல்; speak without restraint.

வாய்க்குவாய் வி.அ. (adv.) விடைக்கு விடை பேசுதல்; counter answering frequently, வாய்க்குழிப்புண் பெ. (n.) வாயின் உட்புறத்தே உண்டாகும் ஒரு வகையான புண்; perforating, ulcer in mouth

வாய்க் குளறல் பெ (n.) நோயினால்உன்றிப் பேசுதவ்; பதற்றத்தில் சொற்றடு மாறுதல்;blabber, inccheraney of speech through to be checked. வாய்க்குற்றம் பெ. (n.) I. தன்னையறி யாமற் பேச்சில் நேரும் பிழை; slip of the tongue, lapas linguae. 2. பேச்சுக் குற்றம்;erarin speech.

வாய்கிழிய வி.எ. (adv.) அதிகப் பேச்சு; loudly and over speaking. வாய்குளிரப்பேசுதல் வி. (v.) இளிமை யாகப் பேசுதல்; honeyed speech. வாய்கூசுதல் பெ. (n.) சொற்கள் பேசுவதில் அருவருப்புக் கொள்ளுகை; being ashamed to use indecent words.

வாய்க்கூடு பெ. (n.) விலங்கின் வாயின் மேலிடுங்கூடு; small basket or other contrivance for muzzling an animal. வாய்க்கடை பெ. (n.) வாய்க்கூடு பார்க்க வாய்க்கூலி பெ. (n.) கையூட்டு;

bribe, hush-

money.

வாய்க்கொப்பளித்தல் பெ. (n.) வாயில் தீரூற்றிக் கொப்புளித்தல்: gargling with water or medicinal liquid.

வாய்க்கொழுப்பு பெ. (n.) திமிர்ப்பேச்சு;

செருக்குப் பேச்சு; arogance in speach, insolent speech, 'வாய்க் கொழுப்பால் உதை வாங்கினான்'.

வாய்க்கோணல் பெ. (n.) வாய்க்கோணி யுள்ள நோய்வகை; akind of disease. வாய்க்கோமாரி பெ. (n.) மாட்டுக்கு வாயில் வரும் நோய்வகை; a mouth disease, in cattle.

வாய் கொடுத்தல் வி (v.) 2. உறுதி மொழி கூறுதல்; to give word promisc.