பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/446

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

438

வாய்பிளத்தல்

வாய்பிளத்தல் வி. (v;) Z. அங்காத்தல்; to open one's mouth wide, in gape, 2. திகைத்தல்;

to be non-plussed, 3. முடியாதென்று கை விடுதல்; to give up. 4. இறத்தல்; to die, used in contempt.

வாய்பேசுதல் வி. (v.) தற்பெருமை பேசுதல் ; to brag, boast. வாய்பொத்துதல் பெ. (n.) பெரியோர் முன்னிலையில் மதிப்புரவுக் குறியாக

வாயை

வலக்கையால் மூடிக்

கொள்ளுதல்; to cover one's mouth with the plam of the right hand, as a mark of respect in the presence of one's superiours. வாய்மண்போடுநல் வி. (v) 2. பிழைப்பைக் கெடுத்தல்; to deprive a person of his means of livelihood, 2. கொடுமை செய்தல்; to do a wicked act. வாய்மூடுதல் வி. (v.) I. பேச்சு, அழுகை முதலியவற்றை நிறுத்துதல்; to cease speaking, crying, etc., 2 குவிதல்; to

close as a flower.

வாய்மொழிதல் வி. (v.) 1. கூறுதல்; to speak. 2. தூய மந்திரங்களை யோதுதல்; to consecrate by uttering secred hymns. 3. எழுத்து மூலமின்றி வாயாற் கூறுஞ்சொல்; unwritten oral

declaration.

வாய்மொழித் தேர்வு பெ. (n.) மாணவரை நேரடியாக வினவித் தெரிவு செய்யும் தேர்வு, ஆய்வு மாணவர்க்காள தேரடித் தேர்வு;

viva-voce, oral examination.

வாய்மோசம் பெ. (n.) 1. வாய்க்குற்றம் பார்க்க: 2. சொன்ன சொல் தவறுகை; failing to keep one's word. வாய்வட்டமாகப் பேசுதல் வி. (v.) திறமையாகப் பேசுதல்; to speak cleverly.

வாய்வயிறுகட்டல் பெ. (n.) பத்தியமாக இருத்தல், சாப்பிடாமல் பணம் சிக்கனப்படுத்தல்; to keep on diet. வாய்வார்த்தை பெ. (n.) 1. வாய்ப்பேச்சு; word of mouth. 2. நயம் பொருத்திய சொல்; soft and kind words.

வாய்விட்டு வி.எ. (adv.) 1. ஒலியெழுப்பி, வெளிப்படையாக; loudly. 2. மனம் திறந்து; openly, frank ly.

வாய்விடல் பெ. (n.) கொட்டாவி விடல்;

yawning.

வாய்விடுதல் வி. (v.) 1. பேசுதல்; to speak. 2. வெளிப்படையாகச் சொல்லுதல்; to speak, openly and clearly without any reservation. 3. வெளிப்படுத்துதல்; to divulge, as secrets. 4. சூளுறுதி; vow. 5. கடித்த கடிப்பை விடுதல்; to leave off biting.

வாய்வேக்காடு பெ. (n.) வாய் முழுவதும்

தொத்தாற் போலிருக்கும் நோய் வகை; thrush, a disease of the mouth, aphthae.

வாய்வேக்காளம் பெ. (n.) வாய்ப்புண்; ulceration of the mouth/ stomatitis.

taste.

வாய்வைத்தல் வி (v) 1. உண்ணுதல்; to eat. 2.ஊதுதல்;

to blow as a wind - instrument. 3. சுவைத்தல்; to 4. தலையிடுதல்; to meddle or interfere. 5. சிறிது பயிலுதல்; to leam a little, to have a deultory knowledge 6. கடித்தல்; to bite. 7. முந்திரிக்கொட்டைத் தனமாக எதிர்மறையாகப் பேசுதல்; speak negative.

வாயடி பெ. (n) வாயால் மருட்டுகை;

OVET -bearing speech brow beating by speech, bluff.

வாயடித்தல் பெ. (n.) 1. வாயிலேயடித்துக் கொள்ளுதல்; to beat one's mouth, as in agrief. 2. அலப்புதல்; to chat. வாயடைத்தல்வி (x) பேசவொட்டாதபடி செய்தல்; to silence, as an opponent by arguments.

வாயலம்புதல் வி, (v.) உண்டபின் வாய் கழுவுதல்; to wash or rinse one's mouth, as after a meal.

வாயாடுதல் வி. (v.) 1. சொற்றிறமாய்ப் பேசுதல்; to speak cleverly or eloquently. 2. வீண்பேச்சுப் பேசுதல்; to speak frivolously; to fabble. 3. ஓயாது மென்று கொண்டிருத்தல்; something continuously chewing.