பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

444

விதறுதல்

விதறுதல் வி. (v.) 1. தடுங்குதல்; to be agitated to be shaky. 2. பதறுதல்; to be over hasty. விதுக்குவிதுக்கெனல் பெ. (n.) அச்சத்தால் நெஞ்சாங்குலை படபடவென்று அடித்தற் குறிப்பு; onom.

expr, ofpalpi- tation of heart due to fear or shock. விதுவிதுத்தல் பெ. (n.) மகிழ்ச்சியுறுதல்; to rejoice.

விதுவிதுப்பு பெ. (n.) I. விருப்பம்; longing, desire. 2. உடலின் குத்து நோவு; throbbing pain. 3. நடுக்கம் ; trembling. விதைக்கு விடுதல் வி. (v.) விதைக் குதவுமாறு கொடி, மரங்களிற் காய்களை முற்றவிடுதல்; to allow set apart berries, fruits etc, to ripen on the plant itself for obtaining seeds. விதைகட்டுதல் வி. (v.) விதைக் கென்று தவசத்தைத் தனியே வைக்கோல் போரில் கட்டி வைத்தல்;

to store seed- grain by bundling it up in straw. விதைத்துப்பாழ் பெ. (n.) தண்ணீர்த் தட்டால் விதை செவ்வனே முளைக் காமலேனும் கதிர்பிடிக்காமலேனும் கெட்டுப் போகை; total failure of crop due either to the seeds not sprouting properly or the seedlings not maturing on account of scanty supply of water. விதைநெல் பெ. (n.) விதைப்பதற்காக வைக்கப்பட்ட நெல்மணி; seed grain of paddy.

விதைநெல்லெறிதல் வி. (v.) வித்திடு தற்கான நெல்மணிகளை கழனியிற் தூவுதல்; to sow seeds of paddy. விதைப்பு பெ. (n.) வித்திடுகை; sowing. விதைப்புக்காலம் பெ. (n.) விதைப் பதற்கான பருவம்; sowing season,


seed-time.

விதைமணி பெ. (n.) விதைப்பதற்குரிய தவசம் ;

seed-grain.

விதைமுளைத்தல் வி. (v.) முதிர்ந்த விதை அதற்குத் தகவான சூழ் நிலையில் முளைத்தல்; sprouting.

விதையடித்தல் வி . (v.) ஆடு,மாடு முதலான கால்நடைகளின் விதைப் பையிலுள்ள விதையை நசுக்கிச் செயலிழக்கச் செய்தல்; to castrate; to emasculate.

விம்முதல் பெ. (n.) 1. தேம்பியழுதல்; to heave a sob, as a child. 2. வருந்துதல்; to be in distress, agony.

விருந்தோம்பல் பெ. (n.) வீட்டிற்கு வரும் விருந்தினரை வரவேற்று உபசரித்தல்; welcoming and entertaing guests. விருப்புவெறுப்பு பெ. (n.) வேண்டுதல்

GOLGOTT GOLD; desire and aversion, like and dislike.

விருவிருத்தல் வி. (v.) 1. கடுத்தல்; to be peppery with pain. 2. உறைப்பா யிருத்தல்; to be peppery in taste. 3. சினத்தாற் பரபரத்தல்; to get flurred due to angry mood. 4. விரைதல்; to be in a hurry.

விலங்குபோடுதல் வி. (v.) கை கால்களில் தளையிடுதல்; to hand cuff put in chains or fetter.

விலவிலத்தல் வி. (v.) I. மிக நடுங்குதல்; to tremble excedingly. 2. மிகவும் வலுவிழத்தல்; to become extremly weak. 3. நெருக்கமின்றியிருத்தல்; to be sparse, not close.

விலைக்கழிவு பெ. (n.) கொள்முதல் விலையில் தள்ளுபடி; discount in sale price. விலைப்பட்டி பெ. (n.) 1. பண்டங்களின் விலைக் குறிப்பு; list ofprices; invoice. 2. விற்பனைக் கணக்கு; sales account. விலைபோதல் பெ. (n.) 1. விற்பனை யாதல்; to be sold out; get sold. 2.பொருளுக்காக முறை தவறுதல்; get sold by improper way. விலைமதிப்பு பெ. (n.) விலை மதிப்

பிடுகை; estimate of price. விலைமேவுதல் வி. (v.i.) 1. விலையை ஒத்துக் கொள்ளுதல்; to agree the price. 2.எளிதாக விலையாதல் ; to be easily

saleable.