பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

448

வெட்டவெளிச்சம்

any vegetation. வெட்ட வெளியில் நின்று வானத்தின் பார்த்தான்'.

அழகைப்

வெட்டவெளிச்சம் பெ. (n.) 1. எல்லோ ராலும் அறியப்படும் நிலை; வெளிப் படை; being obvious or evident;

self- evident nature. 'குற்றத்தின் பின்னணி வெட்டவெளிச்சமாகி விட்டது'. 2. எதையும் தெளிவாகப் பார்க்கக் கூடிய அளவுக்கு வெளிச்சம் (பிரகாசம்); broad daylight. வெட்ட வெளிச்சத்தில் திருட்டு நடந்திருக் கிறது'. வெட்டிமுறித்தல் வி. (V.) இன்றியமையாத அல்லது சிறப்பான செயலைச் செய்து முடித்தல்; (ironically) do a wonderful job. 'நீ என்ன வெட்டி முறித்து விட்டு ஓய்வெடுக்கிறாய்?'. வெட்டுதல் வி. (v.) I. நறுக்குதல்; துண்டாக்குதல்; cut; cut off; chop; slice. பழங்களை வெட்டித் தந்தாள்'. 2. செதுக்குதல் போன்ற செயல்களின் மூலம் ஒரு பரப்பின் ஒரு பகுதியை

நீக்குதல்; trim; parc (whith a spade).

வரப்பை வெட்டி ஒழுங்கு படுத்தி னார்'. 3. நிலத்தைத் தோண்டுதல்; dig (out); construct (by digging). 'நிலக்கரி

வெட்டி எடுக்கும் எந்திரம்'. 4. கல், மாழை போன்றவற்றில் எழுத்து, குறியீடுகளைப் பொறித்தல் அல்லது பதித்தல்; inscribe (on a slab of stone); engrave (on metal). அரசர்கள் தங்கள் வெற்றிகளைக் கல்லில் வெட்டி வைத்திருக்கிறார்கள்'. 5. படைப்பில் தேவையில்லாத பகுதியை நீக்குதல்; censor anything objectionable and unnecessary). தணிக்கைக் குழுவால் படத்தில் பல காட்சிகள் வெட்டப் பட்டன. 6. சில விளையாட்டுகளில் எதிராளியின் காயை ஆட்டத்தி லிருந்து நீக்குதல்; cut out (in certain games) remove (a piece, etc)). தாயக்கட்டை ஆட்டத்தில் பழுக்கப் போகும் நேரத்தில் காயை வெட்டி

விட்டார்கள். 7. பேச்சை மறுத்தல்; தடுத்தல்; oppose; argue against. கருத்தை ஒட்டியும் வெட்டியும் பேசினார்கள்'. 8. நோயால் கை,கால் முதலிய உறுப்புகள் ஒரு பக்கமாகச் சுண்டப்படுதல்; (off limbs) twitch. வலிப்பால் கை கால்கள் வெட்டி வெட்டி இழுத்தன. 9. மின்னல் மின்னுதல்; (of lightning) strike. மின்னல் வெட்டுவதைப் பார்க்க வேண்டாம் என்றார்'. 10. வயிறு நிரம்ப உண்ணுதல்; dovour (food) eat with avidity. 'பிடித்த குழம்பு என்றதும் சாப்பாட்டை வெட்டு வெட்டென்று வெட்டுகிறான்'. 11. ஆடு, கோழி முதலியவற்றை உணவுக்காகக் கொல்லுதல்; killing animals for food. கிடாவெட்டி விருந்துவைத்தார்'. 12. அரிவாளால் தாக்கிக் கொலை செய்தல்; murder. 'கூலிப்படை யினரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்'. 13. கோடு கள், சாலைகள் போன்றவை ஒன்றுக் கொன்று குறுக்கிடுதல்; cross. இருகோடுகளும் வெட்டாமல் நேராகச் செல்ல வேண்டும்'.

வெடவெடத்தல் வி. (v.) அதிக நடுக்கம்; shivering.

out.

வெடித்தல் வி. (v.) 1. ஓசையோடு பிளத்தல்; burst; erupt. 'எரிமலை வெடித்துத் தீக்குழம்பைக் கக்கியது'. 2. சினம், அழுகை, விம்மல் விசை யுடன் வெளிப்படுதல்; (of sobs) burst விம்மி வெடித்தழுதாள்'. 3.வெடிக்குண்டு, வெடி ஆகியவை விசையுடன் சிதறுதல்; விசையுடன் சிதறச் செய்தல்; (of a bomb, etc.) explode/explode (a bomb, etc.,). 4. சினம், எரிச்சல் முதலியவற்றால் சீறுதல்; explode (with anger, etc.,). ஊழலைக் கண்டு வெடித்தார். 5. விசையுடன் துண்டுபடுதல்; (of blood veins, etc.,) burst. 'குருதிநாளங்கள் வெடித்தன'. 6.தெறித்தல் அல்லது பிளத்தல்; (of lips) be cracked. 'மழையின்றி நிலம் வெடித்தது'.

பாளம்பாளமாக