பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 ஈசான மூலை ஈசான மூலை பெ. (n.) வடகிழக்குப் பக்கம்; north-east quarter. ஈட்டி எறிதல் பெ. (n.) ஈட்டியை எறியும் விளையாட்டுப் போட்டி; javelin throw. ஈட்டியவிடுப்பு பெ. (n.) நிலையான பணியாளர்கள் குறிப்பிட்ட வேலை நாட்களுக்கு ஒரு நாள் விடுப்பு என்ற வகையில் சேர்த்து வைக்கும் விடுப்பு; leave earned and accumulated by permanent employees at the rate of so many days for a specified period of service. ஈடுகட்டுதல் வி. (v.) ஒன்றின் குறையை, மற்றொன்றின் மூலம் நிறைவு செய்தல்; சரிகட்டுதல் ; make good, make up for. ஈடுகொடுத்தல் வி. (v.) ஒருவரின் திறமைக்கு மற்றொருவர் நிகராக நிற்றல்; சமமாக இருத்தல்; match up to, rise equal to. ஈடுசெய்தல் வி. (v.) இழப்பை, குறையைச் சரிகட்டுதல்; ஈடு கட்டுதல்; compensate for, make good. ஈடுசெய்விடுப்பு பெ. (n.) அறிவிக்கப்பட்ட விடுமுறை நாட்களில் பணி புரிந்தால் அதற்குப் மாற்றாக எடுத்துக் கொள்ளும் வேறொரு விடுமுறை தாள்; compensatory holiday. ஈடுபடுத்துதல் வி. (v.) I. ஒருவரை ஒன்றில் முனையச் செய்தல் (அ) இறங்கச்செய்தல்; engage. 2. தாட்டம் கொள்ளச் செய்தல், ஒன்றைச் செய்தல்; engage in something. ஈடுபடுதல் வி. (v.) 1. அகப்படுதல்; to be ensnared. 2. மனங்கவிழ்தல்; to be absorbed. ஈடுவைத்தல் வி. (v.) அடகுவைத்தல்; pledge, mortgage. ஈடேற்றுதல் வி. (v.) எண்ணத்தை, விருப்பத்தை நிறைவேற்றுதல்; fulfil. ஈடேறுதல் வி. (v.) நோக்கம், விருப்பம் நிறைவேறுதல், உண்மையாதல்; be fulfilled. ஈமக்கடன் பெ. (n.) இறுதிச்சடங்கு; funeral rites. ஈயடிச்சான் காப்பி பெ. (n.) தானே சிந்தித்துச் செய்யாமல், மற்றொருவர் செய்வதைப் பார்த்து, அப்படியே பின்பற்றும் செயல்; blind copying. வி. (v.) ஏனத்தின் உட்பகுதியில் ஈயத்தை உருக்கித் தடவுதல்; coat (the inside of a brass vessel) with lead (to avoid chemical reaction). ஈயம்பூசுதல் ஈயெனல் பெ. (n.) பல்லைக்காட்டுங் குறிப்பு ; expression signifying grinning. ஈயோட்டுதல் வி. (v.) I. வேலை இல்லாமல் இருத்தல்; idle away. 2. வணிகத்தில் பரபரப்பு குறைந்து காணப்படுதல்; be dull. ஈர்க்கு பெ. (n.) பனை, தென்னை ஓலையின் நடுவில் உள்ள மெல்லிய நரம்பு; rib of a palm leaf. ஈர்வாங்கி பெ. (n.) தலைமுடியிலுள்ளஈர், பேன் ஆகியவற்றை எடுப்பதற்குப் பயன்படும் மரச்சீப்பு; long - toothed wooden comb. ஈரற்குலை நடுக்கம் பெ. (n.) அச்சத்தினால் ஈரற்குலைக்கேற்படும் அதிர்ச்சி; shock due to visceral tremor through fear. ஈரற்குலை பதைத்தல் வி. (v.) மிகு துன்பப்படுதல்; to become deeply grieved. ஈருள்ளி பெ. (n.) காரம் சற்றுக்கூடிய சிறு வெங்காயம்; variety of onion. ஈவிரக்கம் பெ.(n.) அடிப்படை மாந்தத் தன்மைகளான இரக்கம், பரிவு முதலியன ; pity, mercy. ஈளையிருமல் பெ. (n.) கோழையுடன் கூடிய இருமல்; cough with phlegm.