பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முனைவர் கோ.விசயராகவன் இயக்குநர், செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் வாய்மை வெல்லும் நகர் நிருவாக அலுவலக வளாகம், முதல் தளம், எண். 75, சாந்தோம் நெடுஞ்சாலை, எம்.ஆர்.சி. நகர், GOGIT 60GHT - 600 028. பதிப்புரை இந்திய அகராதி வரலாற்றில் தமிழ்மொழிக்கு ஒரு பெருமை உண்டென்றால், அது இந்திய மொழிகளில் தமிழில்தான் முதன்முதலாக அகராதி வெளியானது என்பதுதான். அதுபோல் இந்திய மொழிகளில் தமிழ்மொழியில்தான் பேரகராதி (Lexicon) தொகுதிகளும், சொற்பிறப்பியல் அகரமுதலி (Etymological Dictionary)யும் வெளிவந்தன. அகராதிகளில் பலவகை உண்டு. அகராதி (Dictionary), பேரகராதி (Lexicon), கலைச்சொல் அகராதி (Glossory), பயன்பாட்டு அகராதி (Pedagogial Dictionary) எனத் தேவைகளுக்கேற்ப பல கோணங்களிலும், பல அளவுகளிலும் அகராதிகள் வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் அகரமுதலி என்ற இலக்கைத் தாண்டி, தமிழ்ச்சொற்களின் தோற்றத்தை ஆராய்வதுடன், காலந்தோறும் சொற்களின் பொருள் மற்றும் வடிவ மாற்றங்களையும் பதிவு செய்துள்ளது. இயக்ககம் உருவாக்கப்பட்ட 38 ஆண்டுகளுக்குள் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியின் 31 தொகுதிகளை வெளியிட்டு நிறைவு செய்துள்ளது. அதன் பணி முடிந்தவுடன் பல கோணங்களிலும் அகராதிகளை உருவாக்கும் முயற்சியில் இவ்வியக்ககம் ஈடுபட்டுள்ளது. பல்வேறு காலக்கட்டத்தில் பல்லாயிரம் சொற்கள் தமிழில் தோன்றியிருக்கின்றன. இவற்றில் பல இன்று நடைமுறையில் பயன்பாட்டில் இருக்கவும் சில பயன்பாட்டில் இல்லாமலும் போயுள்ளன. இவ்வாறு வழக்கற்றுப் போன சொற்களைத் தவிர்த்து, இக்கால மக்களின் நடைமுறையில் உள்ள புதிய சொற்களை இணைத்து அவற்றை மட்டுமே தொகுத்து உருவாக்கப்பட்ட அகராதியே ‘நடைமுறைத் தமிழ் அகரமுதலி'யாகும்.