பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகேசள் காசிராஜன் இ.ஆ.ப., அரசு செயலாளர், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை வெலலும் தலைமைச் செயலகம் GGIT 606-600 009. நாள் : 29.09.2021 அருந்தமிழுக்கு அணிகலம் தமிழுணர்ச்சி - தமிழ் மலர்ச்சி - தமிழ் மணம் - தமிழ் ஒளி - தமிழ் முரசு தமிழ்க் கலை - தமிழ் விருந்து - தமிழ் வெள்ளம் தமிழ்நாட்டின் மாட்சியாகும். தன்னேரில்லாத மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் ‘எங்கும் தமிழ்’, ‘எதிலும் தமிழ்', 'எல்லாம் தமிழ்' என்ற நிலை ஓங்கி வளர்கின்ற சூழலில் மாண்புமிகு தொழில்கள், தமிழ் ஆட்சிமொழி, தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சரின் சீரிய வழிகாட்டுதலில் தமிழ் வளர்ச்சி துறை தகத்தகாயமாக மின்னுகிறது. ஒரு மொழியின் சொல்வளம் என்பது அம்மொழியில் வழங்கும் சொற்களின் எண்ணிக்கையைச் சார்ந்தது. 1500 ஆண்டுக்கால வரலாறு கொண்ட ஆங்கில மொழியில் 10,22,000 சொற்கள் வழங்குகின்றன. 98 நிமிடத்திற்கு ஒரு சொல் ஆங்கிலத்தில் வழக்கிற்கு வருகிறது. நாளொன்றுக்கு 14 சொற்கள் ஆங்கில வழக்கில் ஏறுகின்றன. ஆண்டொன்றுக்கு 8500 சொற்கள் நிலைபெறுகின்றன. ஆனால், 3200 ஆண்டுக்கால வரலாறு கொண்ட தமிழ் மொழியில் வழங்கும் சொற்களின் எண்ணிக்கை குறித்த கணக்கும், அச்சொற்களின் பட்டியலும், அவற்றின் வழக்காற்று விவரங்களும் நம்மிடையே உறுதியாக இல்லை என்ற குறையைக் களையும் நோக்கில், தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் அகரமுதலிகளைத் தொகுத்து வழங்குவதைச் சிறப்பான பணியாகக் கொண்டு செயலாற்றுகிறது. அன்றாட நடைமுறையில் பேசப்படும் சொற்களுக்குத் தமிழ் மற்றும் ஆங்கில பொருள் கூறி, தேவைப்படும் இடங்களில் உரிய எடுத்துக்காட்டுச் சான்றுகளுடன் நடைமுறைத் தமிழ் அகரமுதலி மக்களின் பயன்பாட்டிற்குப் பெரிதும் உதவும். நான் பள்ளியில் பயின்றபோது, மாணவர்கள் அனைவரும் ஆங்கிலக் கையகராதி, உலக நாடுகள் வரைபடம், வரைகலைப் பேழை ஆகிய மூன்றையும் எப்போதும் வகுப்பிற்கு எடுத்து வர வேண்டும் என்று வலியுறுத்திய நினைவு எனக்கு வருகிறது. நல்ல மாணவன் எந்த நிலையிலும் ஒரு சொல்லுக்குப் பொருள் காணும் பயிற்சியை அகராதியின் வழியாகக் கண்டு தெளிகிற பழக்கம் அமைய வேண்டும். அப்படிப்பட்ட நல்லுணர்வுக்கு ஊக்கம் தருகின்ற வகையில் இந்தச் சிற்றகராதி வெளியிடப் பெறுகின்றது. திராவிட மொழிகளின் பழம்பெருமைக்கும், கலப்பில்லாத தூய மொழி வளம், இலக்கிய வளம், பண்பாட்டு வளம் ஆகியவற்றுக்கு அரணாகத் தமிழ் வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் செழுமையான முறையில் பல அகராதிகளை வெளியிட்டு தமிழ் மொழியின் ஆக்கத்திற்கு அருந்தொண்டாற்ற வேண்டுகிறேன். அன்புடன், 19/200 (மகேசன் காசிராஜன்)