பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 உச்சிமுகர்தல் உச்சிமுகர்தல் வி. (v.) அன்பை வெளிக்காட்டும் வகையில் முன்னத் தலையில் முத்தமிடல்; kiss one's forehead as a way of showing one's affection. உச்சிவானம் பெ.(n.) தலையுச்சிக்கு நேர் மேலாக உள்ள வானம்; sky overhead; zenith. உச்சுக்கொட்டுதல் வி. (v.) அக்கறை யின்மை, விருப்பமின்மை, வெறுப்பு ஆகியவற்றை வெளிக்காட்ட உச்சு’ என்று ஒலி யெழுப்புதல்; click one's tongue to express one's dislike, indifference, dissatisfaction, etc., கடைக்குப் போய் வா என்று அம்மா சொன்னதும் அவன் உச்சுக் கொட்டினான். உசத்தி பெ. (n.) உயர்த்தி; உயர்வு; மேலானது; being treated as superior. உலகத்தில் தாய் தந்தையைவிட உசத்தியானது ஒன்றுமில்லை'. உசுப்புதல் வி. (v.) I. பாய்ந்து தாக்குமாறு ஏவுதல்; set on; set upon. 'கிடாச் சண்டையில் ஆடுகளை உசுப்பி விட்டனர். 2. தூண்டுதல்; urge; motivate. முயன்றால் முடியும் என்று அம்மா உசுப்பிவிட்டார். 3. எழுப் புதல்; wake up, arouse; stir. தூங்கியவனைத் தட்டி உசுப்பினார். உசுப்பேற்றுதல் பெ. (n.) தூண்டிவிடுதல்; instigate. உட்கரு பெ. (n.) I. கதை போன்றவற்றின் அடிப்படைப் பொருள்; theme of a literary work, kemal. 2. அணுவில் புரோட்டான்களையும், நியூட்ரான் களையும் கொண்ட நடுப்பகுதி; nucleus of an atom. 3. உயிரணுவின் நடுப்பகுதி; nucleus of a cell உட்கருத்து பெ. (n.) நுட்பச் செய்தி; intention; implication; import. விடுதலை உணர்வே பாஞ்சாலி சபதத்தின் உட்கருத்து'. உட்காய்ச்சல் பெ. (n.) வெளியில் காய்ச்சல் தெரியாமல் உள்ளாக அடிக்கும் காய்ச்சல்; intermal fever. உட்கார்தல் வி. (v.) I. வீற்றிருத்தல்; to sit down; to occupy a seat. 2. கட்டடத்தின் அடிப்படை கீழிறங்குதல்; (of the foundation of a building) sink; go down; களிமண் தரையில் கட்டியதால் வீடு உட்கார்ந்துவிட்டது'. 3. இரண்டு பகுதிகள் ஒன்றோடொன்று பொருத் துதல்; fit. 'கதவு இன்னும் பொருத்தில் சரியாக உட்காரவில்லை'. 4. பெண் பருவமடைதல்; attain puberty ofgirls. 5.மாதவிடாய் ஏற்படுதல்; menstruate. அவள் உட்கார்ந்து விட்டதால் பூசையில் பங்கேற்க முடியாது' (பே.வ.) 6. தேர்வில் தோல்வி யடைதல்; fail in an examination. எட்டாம் வகுப்பிலேயே அவன் ஒரு முறை உட்கார்ந்து விட்டான்'. 7. பொருத்தமாக அமைதல்; settle, fit. மெட்டில் பாடல் வரிகள் சரியாக உட்கார்ந்திருக் கின்றன. உட்கார்த்துதல் வி. (v.) அமர்த்துதல்; அமரச் செய்தல்; உட்கார வைத்தல்; to seat; make to sit. உட்கிடக்கை பெ. (n.) 1. உட்கருத்து பார்க்க. 2. உள்ளக்கிடக்கை; desire. அயல்நாட்டில் மருத்துவம் படிக்க வேண்டும் என்பது அவரின் உள்ளக் கிடக்கை. உட்குழு பெ. (n.) ஒரு குழுவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரைக் கொண்டதும், முகாமையான முடிவு களைத் தீர்மானிப்பதுமானசிறு குழு; inner group; sub committee. உட்கொள்ளுதல் வி. (v.) 1. உணவு, மருந்து போன்றவற்றைச் சாப்பிடுதல்; take food, etc., consume, ingest. 2. உறிஞ் சுதல்; absorb. கடல் நீரை உட் கொண்டு கருமுகில் திரண்டிருந்தது'.