பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.உட்கூறைக் கொண்டிருத்தல்; அடக்கியிருத்தல்; consist of, include. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பல பிரிவுகளை உட்கொண்டுள்ளது'. உட்செலுத்துதல் வி. (v.) 1. உள்ளே செலுத்துதல்; insert. 2. உள்ளேபோகச் செய்தல்; inject (medicine); pump (air) into something. மருந்தை நோயாளியின் உடம்பில் உட்செலுத்தினார்கள்'. உட்பகை பெ. (n.) வெளிக்காட்டாத பகை; covert enmity. 'உட்பகையைக் கண்டறிந்து களையெடுக்க வேண் டும்'. உட்படுத்துதல் வி. (v.) 1.ஆய்வு, கட்டுப் பாடு ஆகியவற்றிற்கு உள்ளாக்குதல்; to cause to be put in. 'எதையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். 2.தண்டனை, தொல்லை போன்ற வற்றை நுகரச் செய்தல்; subject. உட்படுதல் வி. (v.) I. வரம்பு அல்லது எல்லைக்குள் இருத்தல்; fall within; be within. 'இந்திய எல்லைக்குட்பட்ட பகுதி' . 2. சட்டம் போன்றவற்றிற்குக் கட்டுப்படுதல்; obey; submit to. அனைவரும் சாலை விதிக்கு உட்பட்டு நடக்க வேண்டும்'. 3. நிலைமைக்கு ஆளாதல்; be subject to; be subjected to (influence, impact, etc). உட்பிரிவு பெ. (n.) உள்பாகம்; சிறு பிரிவு; subdivision. 'உயிரினங்களுள் பல உட்பிரிவுகள் உள்ளன. உட்புகுதல் வி. (v.) 1. உள்ளே புகுதல்; get into, enter. மழைநீர் வீட்டில் உட்புகுந்தது'. 2. ஊடுருவுதல்; pass through. 'கண்ணாடியில் ஒளி உட்புக முடியாது'.3.கசிதல் ; seep in. கடலோரப் பகுதி கிணறுகளில் உப்புநீர் உட்புக வாய்ப்பு அதிகம்'. 4. ஆழ்த்து கவனித்தல்; to enter deeply into, get into the heart of. 'உண்மைக் கருத்தறிய உட்புகுந்து படிக்க வேண்டும். உடம்பைத் தேற்றுதல் 53 உட்புறம் பெ. (n.) உட்பக்கம்; inner side of a thing. 'கோயிலின் உட்புறத்தில் பொற்றாமரைக் குளம் உள்ளது'. உட்பூசல் பெ. (n.) குழு, அமைப்பு போன்றவற்றின் உறுப்பினர்களி டையே தன்னலத்தை முன்னிட்டு எழும் மனவேறுபாடு; infighting. உட்பூசல் இல்லாத அரசியல் கட்சிகள் அரிது. உட்பொருள் பெ. (n.) I.உண்மைக் கருத்து; real purport or significane. அனைத்துச் சமயங்களுக்கான உட்பொருளும் அன்புதான்'. 2. மறைபொருள்; secret or esoteric meaning. பெண் கல்வியே இப்புதினத்தின் உட்பொருள். abetment. உடந்தை பெ. (n.) தீய செயல்களுக்குத் துணையாயிருத்தல்; connivance; சிலை கடத்தலுக்கு உடந்தையானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். உடம்புக்கு முடியாமல் வி.அ. (adv.) உடல்நலம் சரியில்லாமல்; be ill. உடம்பு கட்டுவிடல் பெ. (n.) உடம்பு தளர்தல்; infimity through old age, to lose strength. அகவை முதிர்வினால் அப்பாவுக்கு உடம்பு கட்டுவிட்டது'. உடம்பு காந்தல் பெ. (n.) உடல் வெப்பங்கொள்ளல்; body becoming hot. 'கோடை வெயிலால் உடம்பு காந்தலெடுக்கிறது. உடம்பு தேறுதல் வி. (v.) உடல் நல மடைதல்; to recover one's health and strength as a convalescent. காய்ச்சலுக்குப் பின் இப்போது உடம்பு தேறி விட்டது'. உடம்பைத் தேற்றுதல் வி. (v.) 1.உடலை வலிமையாக்குதல்; to make one grow strong in body. உடற்பயிற்சியின் மூலம் உடம்பைத் தேற்றியிருக்