பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 உடம்பு நடுக்கம் கிறான். 2. நோயால் இளைத்த உடம்பை மருந்து கொடுத்துத் தேற்றுதல்; toning up the body with medicine. மருத்துவரின் அறிவுரைப் படி மருந்து சாப்பிட்டு உடம்பைத் தேற்றினான்.3. மெலிந்த உடம்பிற்கு ஊட்டங் கொடுத்தல்; strengthening the body by nourishment during convalescence. "ஊட்டம் மிகுந்த உணவுகளைக் கொடுத்து குழந்தை யின் உடம்பைத் தேற்றினாள். உடம்பு நடுக்கம் பெ. (n.) I. அச்சம், சினம் முதலியவற்றால் உடம்பில் ஏற்படு மொருவகை அசைவு; tremblingarising from disease, fear, anger or excitement. 2. குளிரினால் உடம்பு உதறுதல்; shivering out of cold. உடம்பு பிடித்தல் வி. (v.) 1. உடம்பிற் சதை உண்டாதல்; to pick up flesh. வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த நண்பன் உடம்பு பிடித்துக் காணப் பட்டான்'.2.உடம்பைக் கையால் பிடித்து அமுக்குதல்; the process of pressing the parts of a person's body, shampooing to massage. 'உடம்பைப் பிடித்துவிட்டதால் தசைப் பிடிப்பு வலி குறைந்தது'. உடல் கனத்தல் பெ. (n.) உடம்பு பருத்தல்; growing stout and heavy . உடல் கனத்தலுக்கு உணவு முறையும் ஒரு காரணம்’. உடல்நலம் பெ. (n.) உடலின் நோயற்ற நிலை; health. அனைவரும் உடல் நலத்துடன் வாழ வேண்டும். உடல்நிலை பெ. (n.) உடம்பின் தலமுள்ள, நலமற்ற நிலைமை; health. உடல்நிலை நன்றாக உள்ளது'. உடல்மொழி பெ. (n.) ஒருவரின் உணர் வையும் ஆளுமையையும் வெளிப் படுத்தும் உடல் அசைவும் இருப்பு நிலையும்; body language. நேர் காணலில் உடல்மொழியே முதலில் கவனிக்கப்படுகிறது'. உடலுழைப்பு பெ. (n.) உடலை வருத்திச் செய்யும் கடின உழைப்பு; physical labour. 'எந்திரங்களின் வருகையால் மக்களின் உடலுழைப்புச் சற்றுக் குறைந்துள்ளது. உடற்கல்வி பெ. (n.) விளையாட்டு, மூச்சுப் பயிற்சி ஆகியவற்றின்மூலம் தரப்படும் உடல்நலத்திற்கானகல்வி; physical education. உடற்கூற்றியல் பெ. (n.) உடலுறுப்பு களின் உள்ளமைப்பை விளக்கும் அறிவியல் துறை; anatony. உடற்பயிற்சி பெ. (n.) உடலை நல மாகவும், வலிமையாகவும் வைத்துக் கொள்ள மேற்கொள்ளும் பயிற்சி; physical exercise or training; light gymnastics. உடற்பயிற்சிக்கூடம் பெ. (n.) உடற்பயிற்சி செய்வதற்குரிய கருவிகளும் ஏந்து களும் நிறைந்த கூடம்; gymnasium. உடன் வி.அ. (adv.) I. செயல் நடந்த அதே நேரத்தில் ; immediately. 'வினாத் தாளை வாங்கிய உடன் படிக்க ஆரம்பித்தான் . 2. கூடவே; along with; with. கோவிலுக்குப் போகும் போது அப்பாவும் உடன் வந்தார். உடன்படிக்கை பெ. (n.) I. ஒப்பத்தம்; contract, agreement, pact, treaty. சமாதான உடன்படிக்கை கையெழுத் தானது.2.உறுதிப்பாடு; promise; அவளுக்கு அவன் உடன்படிக்கைச்சொல்லுகிறான்'. உடன்படுதல் வி. (v.) இணங்குதல்; agree. அப்பாவின் கருத்துக்கு அனைவரும் உடன்பட்டோம். assurance. உடன்பாடு பெ.(n.) 1. இணக்கம், ஏற்பு; acceptance, agreement. 'அப்பாவின் கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு' 2.உடன்படிக்கை; ஒப்பந்தம்; treaty, agreement. இரு நாட்டுக்கும்