பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஃறிணை பெ. (n.) உயர்திணை அல்லாதது; irational things. அக்கக்காக வி.எ. (adv.) பகுதி பகுதியாக, தனித்தனியாக; into one's several parts; in great detail. நேரங்காட்டியை (கடிகாரத்தை) அக்கக்காகக் கழற்றித் தூய்மை செய்தான்'. அக்கடா வி.அ. (adv.) 1. வேலைக்குப் பிறகு ஓய்வாக இருப்பது; (after hectic activity) leisurely. 'வீட்டு வேலையை முடித்து விட்டு இப்போதுதான் அக்கடா வென்று உட்கார்ந்தேன்'. 2. மற்றவர்கள் வேலையில் தலை யிடாமலிருப்பது; keeping to oneself. அக்கப்போர் பெ. (n.) வம்புப் பேச்சு; anonymous communication. 'இவ னோட அக்கப்போர்தாங்கலை'. அக்கம்பக்கம் பெ. (n.) 1.குறிப்பிட்ட இடத்தைச் சுற்றியுள்ள பகுதி; neighbourhood; vicinity. நேர்ச்சி (விபத்து) நடந்த இடத்திற்கு அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் ஓடி வந்து உதவினர். 2. சுற்றுமுற்றும்; around, about. அக்கம் பக்கம் பார்க்காமல் வீட்டை நோக்கி நடந்தான்'. அக்கரைச் சிமை பெ. (n.) அயல்நாடு, வெளிநாடு; foreign country. அக்கறை பெ. (n.) 1. ஈடுபாடு,தாட்டம்; concem; interest. 2. கருத்து செலுத் துதல்; serious attention, care. நூல் சிறப்பாக வெளிவருவதற்கு மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டார். அக்காரவடிசில் பெ. (n.) சக்கரைப் பொங்கல்; cooked rice with milk, sugar and ghee. திருமால் கோயிலின் அக்காரவடிசிலின்சுவை அருமை'. அக்கால் பெ. (n.) அப்போது; on that time. ஆஃறிணை 1 அக்கி பெ. (n.) (வைரஸ்) நுண்ணுயிரி நரம்பு மண்டலத்தைத் தாக்குவதால் அடை அடையாக வேர்க்குரு போல் தோன்றிச் சிவந்து வலியை ஏற்படுத்தும் தோல் நோய்;herpes. அக்கி எழுதுதல் வி. (v.) அக்கி வந்த இடத்தில் செம்மண் குழம்பைத் தடவுதல்; apply a solution of potter's red soil as a remedy for herpes. அக்குத்தொக்கு பெ. (n.) உறவுத் தொடர்; relation, connection. அக்குத் தொக் கில்லாதவனுக்கு தூக்கமென்ன?'. அகங்கடை பெ. (n.) வீட்டுவாயில்; entrance of a house. அகங்கை பெ. (n.) உள்ளங்கை; palm of hand. அகத்தர் பெ.(n.) 1.உள்ளிடத்தார்; inmates. 2. வீட்டிலுள்ளோர்; house mates. அகத்துளை பெ. (n.) உட்டுளை; உள்துளை; inner hole, intemal hole. அகந்தை பெ. (n.) செருக்கு, நானென்னும் மிக்குணர்வு; strong feeling of self proudness, arrogance. அகப்பட்டது பெ. (n.) பிடிபட்டது; finally it is found out. 'நான் தேடிய நூல் நூலகத்தில் அகப்பட்டது'. அகப்பட்டவன் பெ. (n.) சிக்கியவன்; person who gets caught. அகப்படுதல் பெ. (n.) 1.பொருள்புரிதல்; to understand. செய்யுளின் பொருள் அகப்பட்டது'. 2. ஒருங்கு சேர்தல்; to collect or gather. 3. சிக்கிக் கொள்ளுதல்; to be entangled. 'பொறியில் எலி அகப்பட்டது . 4. பிடிபடுதல்; to be caught. தேடினால் அகப்படும்'. 5. வயப்படுதல்; to be one's influence. கூட்டத்தினர் அவருக்கு அகப்பட் டிருந்தனர்'. 6. கிடைத்தல்; to be obtained. அகப்பட்டதைச்சுருட்டு'.