பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 அகப்பைச் செருகி அகப்பைச் செருகி பெ. (n.) அகப்பைகள் செருகி வைக்கும் சட்டம்; perforated wooden frame for holding ladle. அகம் பெ. (n.) 1. மனம்; mind. 2. தன்னிடம்; withself. 3. வீடு; home. 4.உள்; in.5.இடம்; place. 6. மார்பு; chest. 7. மூலாதாரம்; fundamental cause. 8. பின்னர்; after; latter. 9.உள்ளிடம்; innerplace. 10. குறியிடம்; target; aim. 11. உட்பட்டது; included. 12. குறைந்திருப்பது; not full. 13. எண்ணம்; thought. 14. அகப் பொருள்; grammar of lovers poetry. 15. மண்ணுலகு ; earth; this world. அகம்பாவம்; பெ. (n.) திமிரு; arrogance; insolence. 'ஆண் என்கிற அகம்பாவம் அவனுக்கு'. அகமகிழ்வு பெ. (n.) உள்ளத்தின் உவகை வகை; delite. அகமனை பெ. (n.) உள்வீடு; inner house. அகரம் பெ. (n.) I. பார்ப்பனர் வாழிடம்; residential area of Brahmins. 2.ஊர்; village. 3. நகரப் பொது; Town in general; Town common property. அகரவரிசை பெ. (n.) ஒரு மொழியில் எழுத்துகள் அமைந்துள்ள வரிசையின் அடிப்படையில் சொற்களைவரிசைப் படுத்தும் முறை; alphabetical order. அகராதி பிடித்தவர் பெ. (n.) பிறரை மதிக்காமல் எதிர்த்துப் பேசுபவர்; impudent person. அகல் பெ. (n.) மண் அல்லது மாழையில் செய்யப்பட்ட எண்ணெயையும் திரியு மிட்டு ஏற்றப்படும் குழிவு அதிக மில்லாத விளக்கு; small shallow bowl -shaped oil lamp made of clay or metal. அகல்(லு)தல் பெ. (n.) I. விரிவடைதல்; to widen, extend. மாநகர் நாளுக்குநாள் 2.நீங்குதல்; to leave, vanish. 'சொந்த நாட்டை விட்டு அகன்று விட்டனர்'. 3. பிரிதல்; to separate. 'அவர் என்னை விட்டு அகன்று வெகு நாளாயிற்று'. 4.தைந்து கிழிதல்; to be wom out. 'புடவை அகன்று போயிற்று'. அகல்வு பெ. (n.) 1. பிரிவு; section. 2.நீங்குகை; eliminate; remove. 3. விரிவு; extension. 4. பரப்பு; area. அகலக்கால் பெ. (n.) விளைவுகளைச் சிந்திக்காமல் செயலில் இறங்குதல்; 80 beyond one's means. 'பெண்ணின் திருமணம் என்று அகலக்கால் வைத்ததில் கடனாகிவிட்டது.' அகலப்படுத்துதல் வி. (v.) ஒரு பரப்பின் அகலத்தைக் கூட்டுதல்; விரிவு படுத்தல்; broaden. அகலம் பெ. (n.) நீளம் அல்லது உயரம் உள்ள ஒன்றில் இரு பக்கங்களுக்கு மிடையே உள்ள தொலைவு; breadth; width. அகலாப்பிணி பெ. (n.) I. நீங்காப்பிணி; permanent disease. 2. தீராநோய்; incurrable disease. அகலிடம் பெ. (n.) 1. அகன்ற இடம்; broad area. 2. உலகம்; world. 3. அகன்ற இடத்தையுடைய நிலப்பரப்பு; broad landscape. 4. நீங்கிய இடம்; removed place. 5.இருப்பிடம்; residence. அகவை பெ. (n.) ஆண்டுப்பருவம்; age (of some one). அகவிலைப்படி பெ. (n.) விலைவாசி ஏற்றத்தைச் சரி கட்ட அடிப்படை ஊதியத்தின் அளவுமுறை ஊதியத் தோடு கொடுக்கப்படும் கூடுதல் தொகை; deamess allowance. அகற்றுதல் வி. (v.) நீக்குதல், அப்புறப் படுத்துதல்; remove, evict. 'சாலை மறியலில் ஈடுபட்டிருந்தவர்களைக் காவல்துறையினர் அகற்றினர்'. அகன்று கொண்டேயிருக்கிறது'. அகன்ற பெ.எ. (adj.) அகலமான; broad. அகன்ற தெருக்கள்'.