பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கலாய்ப்பு பெ. (n.) மனக்குறையை வெளிப்படுத்தும் புலம்பல்; grief, complaint. மணமகள் நிறமில்லை என்று திருமண வீட்டில் அங்கலாய்ப்பு'. ஓர் அங்காடி பெ. (n.) பல பொருட்களை விற்பனை செய்யும் பெரிய கடை அல்லது பல கடைகளின் தொகுதி; department store, shopping complex. அங்குசம் பெ. (n.) யானையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கப் பயன்படுத்தும் வளைந்த முனையை உடைய நீளமானகம்பி; goad used by muhouts. அங்குலம் பெ. (n.) 1.ஓர் அடியின் பன்னிரெண்டில் ஒரு பாகம்; inch. 2. சிறிய அளவு, கொஞ்சம்; a little. இந்தியாவின் ஒரு அங்குல நிலத்தைக் கூட விட்டுக் கொடுக்க மாட்டோம்' என பாதுகாப்பு அமைச்சர்கூறினார். அங்ஙனம் வி.அ. (adv.) அவ்வாறு, அவ்விதம், அப்படி; in that manner. அங்ஙனம் நடந்திருக்காது'. அச்சம் பெ. (n.) தீங்கு, இழப்பு முதலியவை நேரக்கூடிய சூழலில் ஒருவருக்கு ஏற்படும் உணர்வு, அச்சம்; fear, fright. அச்சகம் பெ (n.) நூல்கள், அழைப்பிதழ்கள் போன்றவற்றை அச்சடிக்கும் இடம்; Printing Press. அச்சாரம் பெ. (n.) முன்பணம்; money given in advance (to confirm a contract). கல்யாணத்துக்காகச் சமையல் காரரைப் பார்த்துப் பேசி அச்சாரம் கொடுத்தாச்சு'. அச்சாரம் போடுதல் வி. (v.) எதிர் காலத்தில் தனக்குக் கிடைக்க விரும்பும் ஒன்றுக்குத் தேவையான தொடக்க நிலை ஏற்பாடுகளைத் தற்போதே மேற்கொள்ளுதல்; prepare the ground. அடுத்த தேர்தலில் அசராமல் 3 வெற்றி பெற இப்பவே அச்சாரம் போடுகிறார். அச்சிடுதல் வி. (v.) எழுத்து, படம் முதலியவற்றை அச்சுப் பொறி கொண்டு பதித்தல்; print (a book). அச்சுக் கூடம் பெ. (n.) அச்சகம் பார்க்க. அச்சுப் பிழை பெ. (n.) அச்சிடும் போது நேரிடும் எழுத்து மாற்றம், எழுத்து விடுபடுதல் முதலிய தவறுகள்; Printing error. அச்சுவெல்லம் பெ. (n.) அச்சைப் பயன்படுத்தி செய்யப்படும் சிறு வெல்லக்கட்டி; jaggery cake in the shape of a pyramid. அச்சுறுத்தல் வி. (v.) அச்சமுண்டாக்குதல்; threaten. அச்சேற்றுதல் வி. (v.) அச்சிடுதல்; have (a work) Printed; print. 'எனது நூலை அச்சேற்ற நண்பர் ஒருவர் உதவினார்'. அசட்டை பெ. (n.) பொருட்படுத்தாமை; regardless. அசடு பெ. (n.) மூடன்; fool. அந்த அசடு எங்கே?' அசத்துதல் வி. (v.) 1. மலைக்க வைத்தல்; திணறடித்தல்; stun, overwhelm. ஆளை அசத்தும் அழகு'. 2. தூக்கம் மேலிடுதல்; be overcome by sleep. அசதி பெ. (n.) I. களைப்பு; tiredness. 2.சோர்வு; langour. 'வீட்டை மாற்றும் வேலை என்றாலே அசதி ஏற்பட்டு விடுகிறது'. அசப்பில் பெ.எ. (parti.) போலிருக்கை; at afleetingglance. இவள் அசப்பில் அவள் அம்மாவைப் போலிருக்கிறாள்'. அசராமல் வி.அ. (adv.) அயராமலிருத்தல்; unwearying. அவர் நல்ல உழைப்பாளி உழைக்கும் திறன் அசராமல் உடையவர்’.