பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 அசைப்பு அசைப்பு வி. (v.) அசைக்கை; shaking. அடிபட்டதால் அசைப்பின்றிக் கிடக் கிறான். அசைவு வி. (v.) 1. அசைகை; shaking. அசையாமல் அமர்ந்திடு'. 2. ஆட்டம்; moving about. மரம் அசைவின்றி நிற்கிறது. அஞ்சல் பெ. (n.) 1. ஓர் இடத்தில் இருப்பவர் மற்றொரு இடத்திலிருப் பவருக்கு மடல் (கடிதம்) அனுப்பி வைக்கும் முறை; postal system. 2.ஒலிபரப்பு; broadcast. அஞ்சல் அலுவலகம் பெ. (n.) அஞ்சல் அட்டை, அஞ்சல்தலை முதலியன விற்பது, அஞ்சல்களைப் பெற்று உரிய முகவரிக்கு அனுப்புவது, பணச் சேமிப்பு முறையினை ஏற்படுத்தித் தருவது முதலிய பணிகள் செய்யும் ஒன்றிய அரசு அலுவலகம்; post office. அஞ்சல்தலை பெ. (n.) மடல் (கடிதம்) போக்குவரத்துக்குப் பயன்படுத்தும் கட்டணமாக ஒட்ட அஞ்சல் நிலையம் விற்கும் ஒட்டுதாள்; postage stamp. அஞ்சல்வழிக்கல்வி பெ. (n.) வீட்டி லிருந்தபடியோ, பணி செய்து கொண்டோ கல்லூரிப் பாடங்களை அஞ்சலின் மூலம் பெற்றுப் படிக்கும் படிப்பு; distance education. அஞ்சலி பெ. (n.) நினைவேந்தல்; வணக்கம்; workship. 'மறைந்த தலைவருக்கு மக்கள் அஞ்சலி செலுத்தினர்'. அஞ்சலுறை பெ. (n.) மேலுறை; envelope. அஞ்சற்காரன் பெ. (n.) மடல்களைக் கொண்டு வந்து கொடுக்கும் பணியாளன்; Postman. அஞ்சற்பணவிடை பெ. (n.) அஞ்சலகம் மூலம் பணம் அனுப்புதல்; money order by Post office. அஞ்சற்பிரிப்பு பெ. (n.) மடல்களைச் சென்று சேர வேண்டிய இடங்களுக் கேற்பப் பிரித்து ஒழுங்குபடுத்துதல்; sorting of letters. அஞ்சற்பெட்டி பெ. (n) மடல் போடும் பெட்டி ; Post box. அஞ்சறைப்பெட்டி பெ. (n.) சமையலுக் குதவும் கறிச்சரக்குகளை வைத்துக் கொள்ளும் பெட்டி; spice box. அஞ்சற்பை பெ. (n.) அலுவலகத்தில் மடல்களைப் போட்டுக் கட்டி வைக்கும் பை; Postal bag. அஞ்சாமை பெ. (n.) செயல் செய்ய அச்சமுறாமை; fearlessness. அஞ்சி பெ. (n.) அஞ்சுபவன்; கோழை; coward. அஞ்சி அஞ்சி வாழ்வதை விட அஞ்சாமற் சாவதே மேல்'. அஞ்சிலே பிஞ்சிலே பெ. (n.) இளம் பருவத்தில்; in the young age. அஞ்சிலே பிஞ்சிலே அடித்து வளர்க்க வேண்டும்'. அஞ்சு'பெ. (n.) ஐந்து பார்க்க. அஞ்சு' பெ. (n.) அச்சம்; fear. 'அஞ்சு வதற்கு அஞ்ச வேண்டும்". அஞ்சுகொம்பு பெ. (n.) ஐந்து கொம்பு பார்க்க. 'அஞ்சுகொம்பும் அற்ற பின்னரும் ஆணவம் அடங்க வில்லை'. அஞ்சுதல் வி. (v.) வெருவுதல்; to fear. அட்டக்கரி பெ. (n.) மிகக்கருப்பு; jet-black. அவள் அட்டக்கரிதான் என்றாலும் அழகிய முகம்'. அட்டக்கறுப்பு பெ.(n.) மிக்க கருப்பு; jct black. 'பெண்அட்டக்கருப்பு'. அட்டகோணல் பெ. (n.) ஒழுங்கற்ற அமைவு; not in regular shape. 'பொது