பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இடத்தில் ஒழுங்காய் இல்லாமல் அட்ட கோணலாய் அமர்ந்திருக் கிறான்'. அட்டங்கால் பெ. (n.) அட்டணைக்கால் பார்க்க. அட்டணங்கால் பெ. (n.) கால்களை ஒன்றின் மேல் ஒன்றாகக் குறுக்காக வைத்து உட்கார்ந்திருக்கும் நிலை; சப்பணம் போடுதல்; manner of sitting, with one leg thrown over the other. அட்டணைக்கால் பெ. (n.) இருக்கையில் அமர்கையில் கால்மேல் குறுக்காக இடுங்கால்; one leg placed over the other in sitting, cross legged. அட்டலங்காய் புட்டலங்காய் பெ. (n.) சிறுவர்விளையாட்டு; children's game. அட்டவணை பெ. (n.) 1. பொருட்பட்டி; index. 'நூலின் தலைப்பை அட்ட வணையிட வேண்டும்', 2. பொருட் குறிப்பேடு; ledger. 'இன்றைய வரவு செலவுகளைஅட்டவணைப்போடு! 3. பதிவேடு; register. 'இன்றைய மடல்களை அட்டவணையில் எழுது'. 4. பேரேடு; catalogue. நூல் அட்டவணையின் துணையோடு நமக்குத் தேவையானநூலை எளிதில் எடுத்துக் கொள்னவாம்'. 5. பாட வேளை;period. 'அட்டவணையின் படி இன்று எனக்கு வகுப்பில்லை'. 6. வருகை, புறப்பாடு குறித்த அறிவிக்கை; time table. 'தொடரி கனின் கால அட்டவணையில் மாற்றம் செய்துள்ளனர்". அட்டவணைக் கணக்கன் பெ. (n) பேரெடெழுதுங் கணக்கள்; accountant, ledger keeper. ' அட்டவணைக்காரன் பெ. (n.) அட்ட வணைக் கணக்கன் பார்க்க. அட்டவணைச்சாலை பெ. (n.) கணக்கு வேலை பார்க்குமிடம்; office of accountants. அட்டுழியம் 5 (n.) அட்டவணைப்பிள்ளை பெ. அட்டவணைக்கணக்கன் பார்க்க. அட்டாலை பெ. (n.) I. மேல்வீடு; apartment on an upper storey. 2. காவற் கோபுரம்; watch-tower. 'காட்டு விலங்குகளின் நடமாட்டத்தை அட்டாலையின் மேலிருந்து கண் காணிக்கின்றனர்'. 3. காவற் பரண்; raised platform. 'விளை திலத்தில் அட்டாவை அமைத்துக் காவல் செய்ய வேண்டும்'. அட்டாலை மண்டபம் பெ. (n.) மேல் வீடாகக் கட்டப்பட்ட மண்டபம்;big hall forming the upper storey of a mansion. அட்டாளகம் பெ. (n.) மேல் மாடி; upper storey. 'அத்தக் குடியிருப்பின் அட்டாளகத்தில் குடியிருக்கிறேன்'. அட்டிகை பெ. (n.) கழுத்தணி வகை; closely fitting necklace. 'வட்டிக்குப் பணம் வாங்கி அட்டிகைச் செய்தவன் அட்டிகையை விற்று வட்டிப் பணம் கட்டிணணம் (பழ.)". அட்டில் பெ. (n.) 1. மடைப்பள்ளி; temple kitchen. 2. சமையலறை; kitchen. 3. வேள்விக்கூடம்; place for p rfoming sacrificial ceremonies. அட்டிற்சாலை பெ. (n.) சமையற்கூடம்; kitchen. அட்டுதல் பெ. (n.) ஒட்டுதல்; to join. ஒருவரை அட்டிப் பிழைப்பதும் ஒரு பிழைப்பா? (பழ.)". அட்டூழியம் பெ.(n.) I. கொடுத்தீம்பு; atrocity. 'எல்லைப் பகுதியில் அயல் தாட்டுப் படையினரின் அட்டூழியத்தி ற்கு அளவேயில்லை'. 2.சேட்டை ; mischief. 'இவளின்அட்டூ தியத்தை எப்படிக் கட்டுப்படுத்துவது என்றே தெரியவில்லை”.