பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அட்டை1 அட்டை1 பெ. (n.) புழுப்போன்ற ஊரூயிரி; leech. 'வட்டிக்காரன் அருடையைப் போல் உறிஞ்சு கிறான்'. அட்டை' பெ. (n.) 1. தடித்த தாளட்டை; card board. 2. நூலின் கட்டட அட்டை; bound book cover. 'பிள்ளைகளின் புத்தகங்களுக்கு அட்டை போட வேண்டும்'. 3. செருப்பின் தோலட்டை;layer of the sole of a shoe. அட்டைக்கடி பெ. (n.) அட்டைப் பூச்சி யினாற் கடிக்கப்படுதல்; leech bite. அட்டைக்கடி மருத்துவம் பெ. (n.) நோயரின் உடலிலுள்ள கெட்ட குருதியை அட்டைப் பூச்சியை விட்டு உறிஞ்சி வெளியேற்றி குணப் படுத்துதல்; the art of healing by draining impure blood by leech bite; leech - craft. அட்டைக்குப்பி பெ. (n.) மருத்துவத் திற்கான அட்டைப் பூச்சியை வைத்து வளர்க்கும் குப்பி; glass tube for keeping leeches meant for curative purposes. அட்டைக்குழி பெ. (n.) அட்டைப் பூச்சியுள்ள கிடங்கு; ditch of leeches. அட்டைப் பிசின் பெ. (n.) அட்டையைப் போல் ஒட்டிக்கொள்ளும் பிசின்; a kind of grees which would stick like a leech. அட்டைப்பூச்சி பெ. (n.) மாந்தர்கள் அல்லது விலங்குகளின் உடல் மீது ஒட்டி குருதியை உறிஞ்சும், ஈர நிலத்தில் வாழும் உயிரினம்; leech. அட இடை. (int.) 1. துயரம், இரக்கம், வியப்பு, வெறுப்பு முதலியவற்றை யுணர்த்தும் இடைச்சொல்;exclamation of regret, pity, surprise or wonder dislike etc., (துயரம்) அட, இறந்து விட்டாரா'.(இரக்கம்) அட, காலங் கடந்து பிறந்த பிள்ளை இப்படி உடற் குறையோடு பிறந்துள்ளதே'. (வியப்பு) அட, அதற்குள் ஒரு மடலத்தை முடித்து விட்டாயா' (வெறுப்பு) அட, என்ன வாழ்க்கை இது. 2. விளியிடைச்சொல்; Vocative particle. அடதம்பி, நான்சொன்னதைச் செய்'. அடக்கச் சடங்கு பெ. (n.) பிணத்தை அடக்கம் செய்யும் வினை; burial. அடக்கச் செலவு பெ. (n.) 1. அடக்க வினைக்குச் செய்யும் செலவு; burial expenses. 2. அடக்கச் சடங்கு பார்க்க. அடக்கம் பெ. (n.) 1. அமைதி; calmness. அறிவுக்கு வித்து'. 2. ஆரவார மின்மை; unostentatious. 3. பிறர் செய்தியில் தலையிடாமை; non interference. 4. பணிவான ஒழுக்கம்; humility. 5. பணிவு; submission. 6. தன்னடக்கம்; self control. 7. பொறுமை; patience. 8. ஐம்பொறி யடக்கம்; subjugation of the five senses. 9.மூச்சடக்கம்; supperssion of breath. 10.உயிரொடுங்கியிருக்கை; subdued state of the animating powers, before death. 11. உடற்புதைப்பு; burial. 12.சுருக்குகை; contraction as a tortoise. 13. கமுக்கம்; secret. 14. செறிந்திருக்கை; compactness. எல்லாப் புத்தகங் களையும் பெட்டிக்குள் அடக்கமாக வை'. 15. உள்ளடங்கிய பொருள்; contents as of a box, enclosures as of a letter. 16. செலவோடு சேர்ந்த மொத்த விலை; cost price including expenses. 17.மொத்தச் செலவு; total expenditure. 18. கருத்து; gist. 19. புதைபொருள்; treasure. அடக்கம் செய்தல் வி. (v.) பிணத்தைப் புதைத்தல்; to burry the corpse. அடக்கம்பண்ணுதல் வி. (v.) அடக்கம் செய்தல் பார்க்க. அடக்கமாடுதல் வி. (v.) I. பள்ளி (சமாதி) புகல்; to enter into samadhi voluntarily. 2. ஒடுக்கமாதல்; to become modest.