பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. சுருங்குதல்; to shrink. 4. மூச் சொடுக்கல்; to control the breath. அடக்கவிலை பெ. (n.) ஊதிய (இலாப}ங் கருதாது செய்த செலவின் அளவாகக் குறிக்கப்பட்ட விலை; actual cost price. அடக்கவிலைப் பதிப்பு பெ. (n.) ஊதிய (இலாப)ங் கருதாது செலவின் அளவாக விலை குறிக்கப்பட்ட பதிப்பு; cost price edition. அடக்கியொடுக்கி பெ. (n.) I. முற்றுங் கீழ்ப்படுத்தி; having subjucated completely.2. வேரறக்களைந்து; having eradicated. அடக்குதல் வி. (v.) கீழ்ப்படுத்துதல், அடங்கச் செய்தல்; to bring under control. அடக்குமுறை பெ. (n.) எதிர்ப்பு, போராட்டம் முதலியவற்றை ஒடுக்க, அதிகாரத்தில் உள்ளவர்கள் மேற் கொள்ளும் கடும் நடவடிக்கை; repressive measures, repression. அடக்குமுறைச் சட்டம் பெ. (n.) கண்டித்தடக்கும் சட்டம்; repressive legislation. அடக்குமுறைச் சட்டத்தை எதிர்க்கட்சிகள் வன்மையாகக் கண்டிக்கின்றன. அடக்குமுறையாட்சி பெ. (n.) கண்டித் தடக்கும் அரசாட்சி; repressive government. அடக்கு முறை ஆட்சியை அகற்றியே தீருவோம் என்று மக்கள் கிளர்ந்தெழுந்தனர்'. அடகு பெ. (n.) இலைக்கறி; edible green. அடகு 2 பெ. (n.) கொதுவை; pledge, pawm of personal property. 'நகையை அடகு வைத்துப் படிக்க வைத்தேன்'. அடகுச்சீட்டு பெ. (n.) நகை, ஏனம் (பாத்திரம்) போன்ற பொருளை ஈடாகக் கொடுத்துப் பணம் வாங்கும் போது கொடுக்கப்படும் ஒப்புகைச் சீட்டு; the acknowledgement given by pawn brokers. அடடா 7 அடகுபிடித்தல் வி. (v.) கடனாகப் பணங் கொடுத்து அதற்கீடாக விலை பெறும் பொருள்களை வாங்கி வைத்தல்; todo pawn broking. அடங்க பெ. (n.) 1. உள்ளாக; to be contained within. 2. முழுவதும்; wholy, entirely. அடங்கல் பெ. (n.) 1. கீழ்படிகை; obeying. 2. அமைகை; comprised. 3. உள்ளிடம்; being possible to be stuffed into. 4. செய்யத்தகுகை; being fit or worthy to act. 5. சாகுபடி நோட்டம்; examination of the cultivation of village lands. 6.சாகுபடிக் கணக்கு; detailed village account showing lands cultivated and the nature of the crops. 7. அடங்கல் வேலை; contract work. அடங்கலாக வி.அ (adv.) உள்ளடக்கி, சேர்த்து; including; inclusive of. பொதுவாகக் கிழங்குகளுக்கு, உருளைக்கிழங்கு அடங்கலாக வரிச் சலுகை வேண்டும் என்று கோரி னார்கள். அடங்காப்பிடாரி பெ. (n.) எவர்க்கும் அடங்காத குணமுடைய பெண் அல்லது சிறுவன்; termagant, shrew. அடங்காப் பிடாரியைக் கொண்ட வனும் கெட்டான், அறுகங்காட்டை உழுதவனுங் கெட்டான் (பழ.)' அடங்காமாரி பெ. (n.) அடங்காப்பிடாரி பார்க்க. அடங்குதல் வி. (v.) கீழ்ப்படிதல்; to obey. அடசுதல் வி. (v.) 1. செறிதல்; to be crowded. 2. சிறிது ஒதுங்குதல்; to move aside. அடசி நில்'. அடடா இடை.(int.) 1. வியப்புக்குறிப்பு; an expression of surprise. 'அடடா, எவ்வளவு இனிமையாகப் பாடு கிறார். 2.இகழ்ச்சிக் குறிப்பு; an expression of contempt. 'அடடா.