பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 அடர்த்தி 3. வருந்தற் குறிப்பு; an expression of grief. அடடா!' மோசம் போனேன். அடர்த்தி பெ. (n.) செறிவு, நெருக்கம்; denseness, density, thickness. அடமானம் பெ. (n.) நிலம், வீடு முதலிய சொத்துக்களை ஈடாக வைத்துப் பணம் பெறுதல்; mortage, pledge. அடாப்பிடி பெ. (n.) ஒட்டாரம்; adament. அவள் அடாப்பிடியாய் வாங்கி விடுவாள்'. அடாவடி பெ. (n.) கொடுஞ்செயல்; outrage, violence. அவன் ஒரு அடாவடிப் பேர்வழி". அடிவி.(v) I.கையால் அல்லது கழியால் அறைதல், ஒன்றை மற்றொன்றின் மீது வலுவாக அறைதல்; beat, hit with the hand or with a cane etc., புடவையைக் கல் மீது அடித்து துவைத்தாள்'. 2. இலக்கில் படும்படி எறிதல்; hit with a stone. 3. ஆணி முதலியவற்றைச் சுவரில் உட் செலுத்த அறைதல்; drive a nail etc., 4. தட்டி ஒலி எழுப்புதல்; make a sound by striking, ring. 'கோவில் மணியைக் கணகணவென்று அடித்தான்'. 5. நேரங்காட்டியில் மணி ஒலித்தல்; bell ring of a clock. 6. பறவைகள் சிறகை ஓசையுடன் அசைத்தல்; flap wings. 7. வெயில், குளிர் முதலியன வலுவாக உறைத்தல்; of heat, chillness, etc., be felt sharply. அடிக்கடி வி.அ. (adv.) பலமுறை; frequently, very often, repeatedly, time and again. அடிக்கல் பெ. (n.) கட்டுமானப் பணியின் துவக்கமாக நடத்தும் சடங்கில் வைக்கப்படும் கல்; foundation stone for a construction. அடிக்கொருதரம் வி.அ. (adv.) சிறிது நேரத்திற்கு ஒரு முறை; very often, time and again. இடது கை விரலால் அடிக் கொரு தரம் மூக்குக் கண்ணாடியைத் தள்ளிவிட்டுக் கொண்டார். அடிக்கோடு பெ. (n.) வலியுறுத்திக் காட்டுவதற்காகச் சொல், தொடர் முதலியவற்றின்கீழ் போடப்படும் கோடு; line drawn under words, phrase etc., for emphasis and for future reference. அடிகள் பெ. (n.) துறவறம் மேற் கொண்டவர்களை, மதிப்பு மிக்க வர்களை மதிப்புடன் குறிக்கப் பயன்படுத்தும் சொல்; respectful term of address for a monk or for s.o. of similar status. 'தவத்திரு அடிகள்' (மறைமலையடிகள்). அடிசக்கை இடை. (int.) பாராட்டை அல்லது வியப்பைத் தெரிவிக்கும் போது முதலில் கூறும் சொல்; particle used for expressing one's appreciation or surprise. அடிசக்கை! கணக்கில் நூற்றுக்கு நூறு வாங்கியிருக்கிறாயா'. அடிப்படை பெ. (n.) ஒன்றுக்கு மிக அடிப்படையானது; basis. மொழி அடிப்படையில் மாநிலங்களை உருவாக்கினார்கள்'. அடிபடுதல் வி. (v.) I. செவிக் கெட்டுதல்; to reach one's ears as a rumour. 'இந்த செய்தி ஊடகங்களில் அடிக்கடி அடிபடுகிறது. 2. அடிக்கப்படுதல் ; to be beaten. அடிபணிதல் வி. (v.) தண்டனிடுதல்;tofall at one's feet, worship. அடிபிடி பெ. (n.) சண்டை; scuffle. இரு கட்சியினருக்கும் அடிபிடி நடக்கிறது'. அடிபிடி சண்டை பெ. (n.) ஒருவரை யொருவர் அடித்துக்கொண்டு செய்யுஞ் சண்டை; quarel in which both parties exchange blows. அடிபிடித்தல் வி. (v.) அடுப்பிலேற்றி சமைக்கும்பொழுது உணவு எனத்தில் பற்றிக் கொள்வது; to stick to the bottom