பக்கம்:நடைமுறைத் தமிழ் அகரமுதலி.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of the cooking vessel and become scorched. அடிபோடுதல் வி. (v.) ஒருவரிடம் உதவி பெறுதற்கு ஏற்ற செய்திகளை முன்னடிப்படையாகச் சொல்லி வைத்தல்; to say or do things as preparing the ground for getting favours from somebody. அடிமட்டம் பெ. (n.) I. பல நிலைகளில் உள்ள கீழ்நிலை; lower level. 2. ஒரு அடிநீளமுள்ள அளவுகோல்; measuring scale one foot in length. அடிமாட்டு விலை பெ. (n.) (பொருள்களின் உண்மையான மதிப்புக்குப் பொருந்தாத) மிகக் குறைந்த விலை; unreasonably low price; rock bottom price. அடிமாடு பெ.(n.) (உழுதல், வண்டி இழுத்தல் போன்ற) வேலைகளைச் செய்ய முடியாத இறைச்சிக்காகக் கொல்லப்படும் கிழட்டு மாடு; old unserviceable cattle meant for the slaughter house. அடிமுட்டாள் பெ. (n.) முழு மூடன்; utter fool. அடிமேல் அடிவிழுதல் வி. (v.) மேலும் மேலும் துன்பப்படுதல்; a striking something one after another. அடிமை பெ. (n.) 1. தன்னுரிமை இழந்து, பிறருக்கு உடமையாக இருக்கும் பணியாள்; slave. 2. அளவுக்கு அதிகமாக ஒன்றில் ஈடுபட்டு முற்றிலும் தன்னை இழந்துவிடும் நிலை; the state of being an addict or slave to something undesirable. அடுக்குப்பானை 9 அடியவன் பெ. (n.) 1. அடிமை; slave. 2. தொண்டன்; devotee. அடியாள் பெ. (n.) அடித்து மிரட்டுதல், கொலை புரிதல் போன்றவற்றைச் செய்வதற்கு கூலிக்கு அமர்த்தப்படும் ஆள்; hireling, henchman. அடியுரம் பெ.(n.) 1. முன்பு இட்ட எரு; manure put in previous seasons. 2.மரத்தைச் சுற்றியிடும் எரு; manure added to the soil around a tree. அடியெடுத்தல் வி. (v.) அடி வைத்தல்; to step. 'குழந்தை அடியெடுத்து வைத்து நடக்கிறான்'. அடியோடு வி.எ. (inf.) வேருடன், முழுவதும்; radically, completely. அடிவயிறு பெ. (n.) கீழ்வயிறு; lower part of the abdomen; lower belly. அடிவருடி பெ. (n.) I. கால்பிடிப்பவ-ன்-ள்- ர்; massager. 2. தான் எண்ணியது எய்தப் பிறரைப் போற்றுபவர்; bootlicker. அடிவாரம் பெ. (n.) மலையினடி ; foot of a hill. அடிவானம் பெ. (n.) தொலைவிலிருந்து பார்க்கும்போது நிலத்தை வானம் தொடுவதுபோல் நீண்ட கோடாகத் தெரியுமிடம்; தொடுவானம்; horizon. அடுக்கடுக்காய் வி.எ. (inf.) கட்டுக் கட்டாய், வரிசை வரிசையாய்; inpiles, in tiers. அடுக்களை பெ. (n.) சமையலறை; kitchen. அடிமைத்தனம் பெ. (n.) பிறநாடு, இனம் அடுக்குச் சட்டி பெ. (n.) அடுக்கு ஏனம்; போன்றவற்றிடம் அடிமைப்பட் டிருக்கும் நிலை; slavery. அடியவர் பெ.(n.) இறை வழிபாடு செய்வதைத் தொண்டாகக் கொண்டவர்; religious follower, devotee. tier of pots of a particular size and shape. அடுக்குப்பானை பெ. (n.) பல்பொருள்கள் போட்டு வைப்பதற்கு ஒன்றன் மேலொன்றாயடுக்கிய மட்பானை கள்; big earthem pots piled one over another and used as receptacles.