பக்கம்:நந்திவர்மன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ந ந் தி வ ர் ம ன்

காட்சி 1.

இடம் : அரண்மனை கலைக்கூடம்.

காலம் முற்பகல்.

(சிற்பி ஒருவன் பல்லவர் ஆட்சிப் பெருமை கு றி த் து உற்சாகமாகப் பாடியவண்ணம், நடனமாதின் சிலை யொன்று செதுக்குகிருன்.

மாமன்னன் நந்திவர்மனும், மகா ராணி சங்காதேவியும் வருகின்றனர். பார்த்து மகிழ்ந்து நிற்கின்றனர்.)

சங்கா : (மகிழ்ந்து) வாழ்க நாட்டியக் கலை! வளர்க சிற்பக் கலை! நாட்டியமும், சிற்பமும் காத்து நல்லரசு நடாத்தும் பல்லவ மன்னர் வாழ்க!

சிற்பி : (பார்த்து வியந்து) ஆ! மன்னர் பெரு மான் ! வருக ! வருக ! மகாராணியார் வருக ! வருக!

வணக்கம், வணக்கம் !

கந்தி :- சிற்பியாரே! முடிந்தனவா நடனச்சிலையின் வேலைகள்?

சிற்பி : முடியுந் தருவாயில் இரு க் கி ற து! மாமன்ன! வரும் மதியத்திற்குள், முடித்து விடுவேன் !

கந்தி - நன்று, சங்க ! நீ பார்த்தனையா, இந்த நாட்டியச் சிற்பத்தை?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நந்திவர்மன்.pdf/11&oldid=671868" இலிருந்து மீள்விக்கப்பட்டது